Tamil Cinema News
தமிழ் மக்களை காப்பாத்திட்டார் விஜய்.. தலைக்கு தில்ல பாத்தீங்களா.. ஆர்.ஜே பாலாஜி ஓப்பன் டாக்.!
மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வரும் நடிகராக ஆர்.ஜே பாலாஜி இருந்து வருகிறார். பெரும்பாலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. அதே சமயம் இயக்குனராகவும் வெற்றி கொடி நாட்டி வருகிறார் ஆர்.ஜே பாலாஜி.
ஆர்.ஜே பாலாஜியை பொறுத்தவரை அவரும் சிவகார்த்திகேயன் போலவே மிக சாதாரணமாக பேசக்கூடியவர். அதனாலேயே அவரது பேச்சுக்கு ரசிகர்கள் அதிகமாக் இருந்து வருகின்றனர்.
இதுவரை இரண்டு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி. அதில் ஒன்று மூக்குத்தி அம்மன் மற்றொன்று வீட்ல விசேஷம். இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலமாக இவர் மாறியிருக்கிறார்.
ஆர்.ஜே பாலாஜி சொன்ன விஷயம்:
இடையில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் பற்றி பேசும்போது ஒரு முக்கியமான விஷயத்தை பேசியிருந்தார். ஆர்.ஜே பாலாஜி. அதில் அவர் கூறும்போது எனக்கு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் சண்டை காட்சிகள் இருந்தது.ஆனால் அன்றைய தினம் விஜய் சாருக்கு சண்டை காட்சிகள் எடுக்க வேண்டும் என ஃபைட் மாஸ்டர் சென்றுவிட்டார்.
அந்த வகையில் விஜய் சார் என்னிடமிருந்து மக்களை காப்பாற்றி விட்டார் என பதிலளித்து இருந்தார் ஆர்.ஜே பாலாஜி.