முதல் படத்துல இருந்தே நாங்க ப்ரெண்ட்ஸ்! –  லோகேஷ் குறித்து பேசிய ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். தற்சமயம் ரன் பேபி ரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் தற்சமயம் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்காக பேட்டி ஒன்றில் ஆர்.ஜே பாலாஜி பேசும்போது தனக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கும் இடையே உள்ள நட்பை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

 லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம் படத்தை இயக்கி அது வெளியானபோது எஃப்.எம்மில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி.அப்போது ஒரு முறை லோகேஷை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவே அவரிடம் மாநகரம் சிறப்பாக இருந்தது என பேசியுள்ளார்.

பிறகு இருவரும் அடிக்கடி கலந்துக்கொண்டனர். நல்ல நண்பர்களாகினர். இப்போதும் கூட மாதத்திற்கு ஒருமுறை இருவரும் சந்தித்து இரவு முழுவதும் கதை பேசும் நிகழ்வுகளும் நடக்கின்றன என ஆர்.ஜே பாலாஜி கூறியிருந்தார்.

இவ்வளவு பெரிய இயக்குனர் ஆனாலும் அனைவரிடமும் சமமாக பழக கூடியவர் லோகேஷ் என கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி.

Refresh