Connect with us

வைரமுத்து தகுதி என்ன? உன் தகுதி என்ன? பாடலாசிரியரை நேரடியாக கேட்ட இயக்குனர்!.

rk selvamani 1

Tamil Cinema News

வைரமுத்து தகுதி என்ன? உன் தகுதி என்ன? பாடலாசிரியரை நேரடியாக கேட்ட இயக்குனர்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான கவிஞர்களில் வைரமுத்துவும் முக்கியமானவர். கவிஞர் கண்ணதாசன் வாலிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்பிய ஒரு கவிஞராக அறியப்படுபவர் வைரமுத்து. சினிமாவில் அவர் வந்த ஆரம்ப காலகட்டங்களில் அதிக வருமானத்திற்கு எல்லாம் அவர் வேலை பார்க்கவில்லை.

அப்பொழுது அவருடைய வருமானம் மிக குறைவு என்று கூறப்படுகிறது தாமதமாகதான் வைரமுத்து அவருடைய சம்பளத்தை அதிகப்படுத்தினார். ஆனாலும் கூட வைரமுத்து சின்ன சின்ன திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பொழுது அவர்களிடம் குறைவான சம்பளத்தை பெற்று வந்தார்.

வைரமுத்து செயல்:

பிரபல இயக்குனரான ஆர்.கே செல்வமணியிடமும் குறைந்த சம்பளத்திற்குதான் பாடல் வரிகளை எழுதினாராம் வைரமுத்து. புலன் விசாரணை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கே செல்வமணி .

ஆர்.கே செல்வமணி திரைத்துறைக்கு அறிமுகமானபொழுதே பலரும் பார்த்து வியந்த ஒரு இயக்குனராகதான் அவர் இருந்தார் என்று கூற வேண்டும். அந்த அளவிற்கு அவரது முதல் படமே அதிக வெற்றியை கொடுத்தது.

புலன் விசாரணை திரைப்படத்தின் கதையை கிட்டத்தட்ட ஹாலிவுட் கதையாக இருந்ததால் மக்கள் பலரும் வியந்து அந்த படத்தை பார்த்து வந்தனர். அதனை தொடர்ந்து விஜயகாந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் ஆர்.கே செல்வமணிக்கு கொடுத்தார்.

கேப்டன் பிரபாகரன் வெற்றி:

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் ஆர் கே செல்வமணி. அதில் அவர் கூறும் பொழுது ரீ எண்ட்ரி ஆன பிறகு ஒரு பாடல் ஆசிரியரை சந்தித்து அவரிடம் பாடல் வரிகளை எழுதுவதற்கு கேட்க சென்றேன்.

அவருக்கு பாடல் வரிகள் எழுத 25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன். அப்பொழுது என்னிடம் பேசிய அவர் முன்பு வைரமுத்து குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார் ஆனால் இப்பொழுது எல்லாம் சினிமாவில் சம்பள நிலை மாறிவிட்டது.

எனக்கு 50000, 1 லட்சம் சம்பளமாக கொடுத்துவிட்டு பாடல் வரிகளை எழுதலாம் என்று நினைத்து விடாதீர்கள் என்று கூறியிருக்கிறார் அந்த பாடலாசிரியர். அதற்கு பதில் அளிக்க ஆர் கே செல்வமணி வைரமுத்துவின் தகுதி என்ன உன் தகுதி என்ன? சினிமாவில் அவரது சம்பளம் உயர்ந்ததை வைத்து உன்னுடைய சம்பளத்தை நீ எப்படி முடிவு செய்யலாம் தான் உனது தகுதிக்கு ஏற்ற அளவில்தான் உனக்கு சம்பளம் கிடைக்கும் என்று புத்திமதி கூறி இருக்கிறார். அதை ஒரு வீடியோவில் ஆர்கே செல்வமணி பகிர்ந்து இருக்கிறார்.

To Top