Cinema History
எம்.ஜி.ஆர் மீது விழுந்த கறையை துடைக்கணும்!.. இதயக்கனி திரைப்படத்தில் இயக்குனர் செய்த வேலை!..
Actor MGR : தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் தமிழ் கதாநாயகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு வந்தப்போதே அவருக்கு அரசியலில் அதிக ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அரசியலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அதற்கான விஷயங்களை தனது திரைப்படங்களிலும் செய்து வந்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல நல்ல கருத்துக்களை சொல்பவையாக இருந்தன. அதே போல அவர் அதிகமாக பாமர மக்களில் ஒருவனாகவே தனது திரைப்படங்களில் காட்டி கொள்வார். இதுவே எம்.ஜி.ஆரை மக்களுக்கு நெருக்கமான ஒரு நாயகனாக மாற்றியது.
திரை பிரபலங்களை பொறுத்தவரை அவர்கள் அனைவரை குறித்தும் ஏதாவது ஒரு விமர்சனம் இருக்கும். எம்.ஜி.ஆர் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் அவர் மீதும் அப்படியான ஒரு விமர்சனம் இருந்தது. எம்.ஜி.ஆர். என்னதான் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டு மக்களின் கதாநாயகனாக இருந்தாலும் அவர் பிறந்தது தமிழ்நாட்டில் கிடையாது.
அவரது பூர்வீகம் கேரளா என கூறப்படுகிறது. இதனால் வேற்று ஆள் ஒருவர் என்கிற விஷயத்தை வைத்து எம்.ஜி.ஆரை பிடிக்காதவர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் ஆர்.எம் வீரப்பன் எம்.ஜி.ஆரின் இந்த கலங்கத்தை துடைக்க நினைத்தார்.
அப்போதுதான் இதயக்கனி திரைப்படம் அவரது தயாரிப்பில் உருவாகி வந்தது. அதில் நீங்க நல்லா இருக்கணும் என்கிற பாடல் ஒன்று வரும். அதில் காவேரி பற்றி முதலில் சில வரிகள் வரும். அதை எம்.ஜி.ஆருக்காகவே வைத்தார் ஆர்.எம் வீரப்பன்.
எப்படி காவேரி ஆறு கர்நாடகாவில் பிறந்தாலும் அது தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் தருகிறதோ அதே போல கேரளாவில் பிறந்திருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பயன் தரக்கூடியவர் எம்.ஜி.ஆர் என உணர்த்தும் விதமாக அந்த பாடல் வரிகளை வைத்தார் ஆர்.எம். வீரப்பன்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்