News
அதுக்குள்ள விவகாரத்தா? மனம் நொந்து பேசிய ரோபோ சங்கர் மகள்!..
சமீபத்தில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு நடந்த திருமணம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசு பொருளாக இருந்தது. பொதுவாகவே பிரபலங்களின் தனிப்பட்ட விவகாரங்கள் என்பது சமூக வலைத்தளங்களில் கசிந்துக்கொண்டு இருப்பது சகஜம்தான்.
ஆனால் பெரிய பெரிய பிரபலங்களின் திருமண வீடியோக்கள் கூட இந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் வராதப்போது இவர்கள் வீடியோ ஏன் இப்படி பிரபலமானது என பார்க்கும்போது பல பிரபல யூ ட்யூப் சேனல்களுக்கு பணத்திற்கு தங்கள் திருமண வீடியோக்களை இவர்கள் விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரோபோ சங்கர் தனது மகளுக்கு முத்தமிட்டது, ரோபோ சங்கர் மனைவி தனது மருமகனுக்கு முத்தமிட்டது என பல வீடியோக்கள் ட்ரெண்டாகி வந்தன. இது மட்டுமின்றி நிறைய யூ ட்யூப் சேனல்களுக்கு ரோபோ சங்கர் குடும்பத்துடன் சென்று பேட்டியும் கொடுத்து வந்தார்.
அப்படி ஒரு பேட்டியில் இந்திரஜா பேசும்போது ஒருவர் யூ ட்யூப் கமெண்டில் இவர்கள் எத்தனை நாள் ஜோடியாக வந்து பேட்டி கொடுக்கிறார்கள் என பார்க்கிறேன் என பதிவிட்டிருந்தார். அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. என் மாமா எனக்கு மூன்று முடிச்சியை வலுவாக போட்டுள்ளார்.
அப்படியெல்லாம் நாங்கள் பிரிந்துவிட மாட்டோம் என அவர் தெரிவித்திருந்தார்.
