Connect with us

சினிமாவில் நான் எடுத்த தவறான முடிவு.. வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன்.. உண்மையை கூறிய நடிகை ரோகிணி.!

rohini

Tamil Cinema News

சினிமாவில் நான் எடுத்த தவறான முடிவு.. வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன்.. உண்மையை கூறிய நடிகை ரோகிணி.!

Social Media Bar

Rohini is an actress who has been acting in Tamil cinema for many years. He also played the lead role in the recently released Rajinikanth starrer Vattaiyan movie

தமிழ் சினிமாவில் சிலருக்கு எவ்வளவுதான் முயற்சி செய்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றன. ஒரு சிலர் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தாலும் கூட அவர்களுக்கான வாய்ப்புகள் என்பது வந்து கொண்டே இருக்கிறது.

அவர்களே சினிமாவை விட்டு செல்ல நினைத்தாலும் சினிமா அவர்களை கைவிடுவதாக இல்லை என்று கூறலாம். அப்படியாக சினிமாவில் தொடர்ந்து நடித்துவரும் நடிகையாக நடிகை ரோகினி இருந்து வருகிறார். ரகுவரனின் மனைவியாக ரோகினி திருமணத்திற்கு பிறகு இனி திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தார்.

ரோகிணி எடுத்த முடிவு:

இதனால் முதலில் சினிமாவை விட்டு இவர் விலகினார் இத்தனைக்கும் சினிமாவில் இருந்து இவர் விலகும் பொழுது இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தன. இருந்தாலும் குழந்தை குடும்பம் என்று ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார் ரோகிணி.

rohini

rohini

மேலும் நிறைய படங்களில் தொடர்ந்து பல வருடங்கள் நடித்தது அவருக்கு அலுப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயங்களை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ரோகிணி. அதற்கு பிறகு தான் நான் எடுத்த முடிவு எவ்வளவு தவறானது என்று தெரிந்தது.

ஏனெனில் நடிக்கும் பொழுது சினிமா அனுப்பட்டுவதாக எனக்கு தெரிந்தாலும் கூட சினிமாவை விட்டு விலகிய பிறகுதான் அது எனக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரிந்தது. என்னால் நடிக்காமல் இருக்க முடியவில்லை.

பிறகு மீண்டும் நான் சினிமாவில் வந்து சேர்ந்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார் ரோகினி. சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

To Top