காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படத்தின் மூலமாக இப்பொழுது அதிக பிரபலமாகி இருக்கிறார் நடிகை ருக்மிணி வசந்த். ருக்மிணி வசந்த் இதற்கு முன்பே தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய இரண்டு திரைப்படங்களில் வரிசையாக நடித்து இருக்கிறார்.
ஏஸ் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் மதராசி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் கூட இந்திய அளவில் இப்பொழுது அவருக்கு ஒரு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது காந்தாரா சாப்டர் ஒன் திரைப்படம்.
இந்த நிலையில் ஏஸ் திரைப்படத்தில் யோகி பாபுவுடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார் ருக்மிணி வசந்த். அதில் கூறும் பொழுது ஒரு சிறந்த நகைச்சுவையாளர் யோகி பாபு என்று கூறலாம்.
ருக்மிணி வசந்த்:
ஏனெனில் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயங்களின் மூலமாகவே எளிதாக அவர் சிரிக்க வைத்து விடுவார். அவரால் எதுவுமே பேசாமல் நடந்து வருவதன் மூலம் கூட ஒருவரை அவரால் சிரிக்க வைக்க முடியும்.
அதேபோல பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அவர் பேசுவதை நிறுத்துவார். அது கூட ஒரு நகைச்சுவையாக அமைந்துவிடும். உண்மையில் நடிப்பிலேயே கடினமான ஒரு விஷயம் நகைச்சுவை செய்வதுதான் என்று யோகி பாபு குறித்து பெருமையாக அவர் பேசியிருந்தார் அந்த வீடியோ இப்பொழுது இரண்டாகி வருகிறது.