News
ரகசிய திருமணம் செய்த ராஷ்மிகா மந்தனா? மாப்பிள்ளை யார் தெரியுமா?
பல காலங்களாகவே கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக நடித்து வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆனால் அவரை அதிகமாக பிரபலப்படுத்தியது கீதா கோவிந்தம் திரைப்படத்தில் வரும் பாடல்தான் எனலாம்.
அதற்கு பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. அவர் நடித்த டியர் காம்ரேட் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. தொடர்ந்து தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதற்கு பிறகு விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தற்சமயம் இவர் நடித்த அனிமல் திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது. சினிமாவிற்கு வந்த நெடுங்காலமாக விஜய் தேவரக்கொண்டாவுடன் நட்பில் இருந்து வருகிறார் ராஷ்மிகா.

திருமண கிசுகிசு:
இருவரும் சேர்ந்து சுற்றுலா எல்லாம் சென்றுக்கொண்டிருந்தனர். எனவே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என சினித்துறையில் பல காலங்களாகவே பேச்சுக்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவர்கள் இருவருமே இதுவரை அதை ஒப்புக்கொண்டு எந்த ஒரு பதிலும் கூறியது கிடையாது.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவிற்கும் விஜய் தேவரக்கொண்டாவிற்கும் இடையே ரகசியமாக திருமணம் நடந்துள்ளது என சில நாட்களாக கிசுகிசுக்கள் உலாவி வருகின்றன. வெகு காலங்களாக காதலித்து வந்த நிலையில் மக்கள் மத்தியில் வீண் சர்ச்சையை கிளப்ப வேண்டாமே என்று அமைதியாக திருமணத்தை செய்திருக்கின்றனர் என கூறப்படுகிறது.
விரைவில் ராஷ்மிகாவும் விஜய் தேவரக்கொண்டாவும் இதை அறிவிப்பார்கள் என பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதுவரை இதுக்குறித்து அவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
