Connect with us

சீரழிந்து நின்ற இயக்குனர்.. கண்ணீர் விட்ட அஜித்.. வாழ்க்கையில் யாருக்கும் இப்படி நடக்க கூடாது!.

ajith sj surya

News

சீரழிந்து நின்ற இயக்குனர்.. கண்ணீர் விட்ட அஜித்.. வாழ்க்கையில் யாருக்கும் இப்படி நடக்க கூடாது!.

Social Media Bar

தமிழ் திரையுலகில் தற்போது பிரபலமாக கொடிகட்டிப் பறக்கும் பல நட்சத்திரங்கள் தங்களுடைய ஆரம்ப காலத்தில் பல துன்பங்களை அனுபவித்து தான் உள்ளனர். அதிலும் தற்போது உச்ச நட்சத்திரமாக உள்ள பல நடிகர்கள் இதுபோல தங்களுடைய தொடக்காலத்தில் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான் தற்போது தமிழ் திரையுலகையே கலக்கிக்கொண்டிருக்கும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா.

நடிகர் எஸ்.ஜே. சூர்யா தன் சினிமா பயணத்தை தொடங்கிய போது பிரபல இயக்குனரான வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அப்போது அவர் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் இயக்குனர் வசந்த் இயக்கிய ஆசை திரைப்படத்தில் நடித்தப்போது அவருக்கு துணை இயக்குனராக இருந்த எஸ்.ஜே. சூர்யாவின் உழைப்பை பார்த்து வியந்துள்ளார். அதனால் அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தார் அதன் பிறகு தான் எஸ்.ஜே சூர்யாவிற்கு முதல் படத்திற்கான வாய்ப்பை கிடைத்தது.

எஸ்.ஜே. சூர்யாவின் முதல் படம்

ஜே சூர்யா தனது முதல் படமான வாலி என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இந்த வாலி திரைப்படத்தை இயக்கும் பொழுது எஸ்.ஜே சூர்யா பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளார்.

sj suriya

எந்த அளவிற்கு என்றால் இந்த வாலி திரைப்படத்திற்காக கதையை நடிகர் அஜித்திடம் சொல்ல அவர் வரும்பொழுது எஸ்.ஜே சூர்யாவை பார்த்து அவர் கண்கலங்கியதாக கூறப்படுகிறது. இதனை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, இந்த வாலி திரைப்படத்தின் கதையை சொல்வதற்காக முதல் முறை எஸ்.ஜே சூர்யா அஜித்திடம் சென்றபோது நல்ல உடை கூட அவர் உடுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் மிகவும் பசியில் இருந்தார். அவரின் முகத்தை பார்த்ததுமே அஜித்திற்கு புரிந்து விட்டது அவர் மிகுந்த பசியில் இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

அஜித் செய்த செயல்

இதனை புரிந்துக்கொண்ட அஜித் உடனே எஸ்.ஜே சூர்யாவை அழைத்து எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது வாருங்கள் இருவரும் போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று கூறி எஸ்.ஜே. சூர்யாவை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் அஜித்.

அங்கு சென்று அவர்கள் இருவரும் சாப்பிட்டபிறகு, எதார்தமாக அவரது செருப்பை அஜித் பார்க்கவே அந்த செருப்பு முழுவதுமாக தேய்ந்து ஓட்டை விழுந்து இருப்பதை அவர் பார்த்து இருக்கிறார்.

ajith kumar

அதனை பார்த்து அவர் கண் கலங்கியுள்ளார். அதன் பிறகு அஜித் உடனே அவருக்கு ஒரு புது செருப்பை வாங்கி கொடுத்துள்ளார். அடுத்த சில நாட்களிலேயே எஸ்.ஜே சூர்யாவின் படத்தையும் கமிட் செய்தார் அஜீத். இதனை மறக்காத எஸ். ஜே. சூர்யா இப்பொழுதும் தான் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகும் மேடைகளில் பேசும்போது அஜித்தை புகழ்ந்து பேசுவதை நாம் பார்க்க முடியும்.

To Top