Connect with us

சாச்சனாவை டார்கெட் பண்ணி தூக்க நடந்த ப்ளான்.. கட்டம் கட்டிய ரவீந்தர்.. இதுதான் காரணமா?

Bigg Boss Tamil

சாச்சனாவை டார்கெட் பண்ணி தூக்க நடந்த ப்ளான்.. கட்டம் கட்டிய ரவீந்தர்.. இதுதான் காரணமா?

Social Media Bar

நேற்று முதல் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. முதல் நாளிலேயே  போட்டியாளர்கள் அனைவருக்கும் டாஸ்க்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

மேலும் இந்த முறை பிக்பாஸில் ஆண்களை தனியாகவும் பெண்களை தனியாகவும் வீட்டில் இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்து விட்டனர் இப்படித்தான் போட்டி 16 நாட்களும் நடக்கும் என்று கூறப்படுகிறது.

சாச்சனாவை டார்கெட் பண்ணாங்க:

ஏனெனில் போன வருடம் நடந்த போட்டியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை சில ஆண் போட்டியாளர்களால் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு தற்சமயம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் என இரண்டு அணிகளாக விளையாடும் படி மாற்றப்பட்டிருக்கிறது பிக் பாஸ்.

இந்த நிலையில் நேற்று 18 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸில் களம் இறங்கி இருக்கின்றனர். இந்த போட்டியில் நடிகை சச்சனாவும் முக்கிய போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.

இதுதான் காரணமா

இவர் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மகாராஜா திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்த நிலையில் அவருக்கு அதிக வரவேற்பு இருந்தது.

ஏனெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே இளம் போட்டியாளராக சாச்சனா இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று போட்டியாளரை எவிக்ஷன் செய்வதற்கான வேலைகள் நடந்து வந்தன முதல் நாளிலேயே ஒரு போட்டியாளரை நீக்கப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கட்டம் கட்டிய ரவீந்தர்

இந்த நிலையில் தொடர்ந்து போட்டியாளர்கள் ரவீந்தரை எவிக்ஷன் செய்வதற்கு கூறி வந்தனர் ஆனால்  அவருக்கான வாய்ப்பு வந்தபோது ஏற்கனவே சாச்சனா கூறிய ஒரு வார்த்தையை பயன்படுத்தி அவரை டார்கெட் செய்து விட்டார் ரவீந்தர்.

 

சாச்சனா போட்டிக்குள் வந்த பொழுது ஒருவேளை பிக் பாஸில் இருந்து நீங்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் நான் நீங்கி விடுவேன் என்று சாதாரணமாக கூறி இருந்தார் அதை ரவீந்தர் முக்கிய காரணமாக கூறியதை அடுத்து மற்ற போட்டியாளர்களும் தொடர்ந்து சாச்சனாவையே எவிக்ஷனுக்கு தேர்ந்தெடுக்க துவங்கினர்.

இதனை அடுத்து இன்று சாச்சனா போட்டியிலிருந்து நீக்க மாட்டார். ஆனால் உண்மையில் ரவீந்தர்தான் போட்டியிலிருந்து நீக்கப்பட இருந்தார் அவர் மிகவும் லாபகமாக சாச்சனாவை கோர்த்து விட்டு விட்டார் இந்த நிலையில் ரவீந்தரை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

To Top