Connect with us

ரிலீசான படத்தில் எப்படிங்க காமெடி வைக்க முடியும்… சுருளிராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!.

suruli rajan

Cinema History

ரிலீசான படத்தில் எப்படிங்க காமெடி வைக்க முடியும்… சுருளிராஜனுக்கு அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு நிறைய சம்பவங்கள் நடப்பதுண்டு. ஒரு திரைப்படம் நன்றாக இருக்கும் என்று எடுத்திருப்பார்கள். ஆனால் அந்த படத்தை பார்த்த பிறகு தயாரிப்பாளருக்கோ அல்லது இயக்குனருக்கோ அது திரைப்படத்தில் ஏதாவது குறை தெரிந்தால் மீண்டும் அதை மாற்றி அமைப்பார்கள்.

சில படங்கள் ரிலீசுக்கு தயாரான பிறகு அதில் காட்சிகள் மாற்றம் செய்தல்  போன்ற விஷயங்கள் நடக்கும். ஆனால் படம் வெளியான பிறகு படத்தில் காமெடி காட்சிகள் சேர்க்க வேண்டும் என்று கூறிய சம்பவமும் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.

அப்போதைய காலகட்டத்தில் நாகேஷுக்கு பிறகு சுருளிராஜனும் சச்சுவும் சேர்ந்த காம்போ மிகவும் பிரபலமாக இருந்தது. கிட்டத்தட்ட 50க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த நிலையில் ஒரு படம் எடுக்கப்பட்டு அது திரையிலும் வெளியாகிவிட்டது. ஆனாலும் அந்த படம் மிகவும் சீரியசான திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் அதற்கு குறைந்த வரவேற்பே கிடைத்த.து எனவே காமெடி காட்சிகளை தனியாக படமாக்கி அதை அந்த திரைப்படத்தில் சேர்க்கலாம் என்று முடிவெடுத்தனர் பட குழுவினர்.

எனவே இது குறித்து சுருளியிடமும் சச்சுவிடமும் சென்று பேசினர். இதைக் கேட்டு அவர்கள் இருவருக்குமே சற்று அதிர்ச்சியாக இருந்தது ஏற்கனவே திரையில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படத்தில் எப்படி காட்சிகளை சேர்க்க முடியும் என்று அவர்கள் யோசித்தனர். இருந்தாலும் பரவாயில்லை என்று நடித்துக் கொடுத்தனர் இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் சச்சு தெரிவித்தார். ஆனால் அது எந்த படத்தில் நடந்த நிகழ்வு என்பதை மட்டும் அவர் கூறவில்லை.

To Top