Connect with us

அந்த மாதிரி செஞ்சாதான் விடுவோம்.. இயக்குனரால் கதறி அழுத நடிகை ஷகிலா… இந்த சோக பக்கம் யாருக்கும் தெரியாது..!

shakila

News

அந்த மாதிரி செஞ்சாதான் விடுவோம்.. இயக்குனரால் கதறி அழுத நடிகை ஷகிலா… இந்த சோக பக்கம் யாருக்கும் தெரியாது..!

Social Media Bar

ஒரு காலகட்டத்தில் மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஷகிலா. ஷகிலாவை பொருத்தவரை பெரும்பாலும் அவர் நடிக்கும் திரைப்படங்கள் கவர்ச்சி திரைப்படங்களாகதான் இருக்கும்.

ஆனால் ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையாக அவர் சினிமாவிற்கு அவர் அறிமுகமாகவில்லை. முதலில் கதாநாயகியாக வேண்டும் என்பதுதான் ஷகிலாவின் ஆசையாக இருந்தது. ஷகிலா தனது குடும்ப கஷ்டத்தின் காரணமாகதான் சினிமாவிற்கு கால் எடுத்து வைத்தார்.

நடிகை ஷகிலா:

அதனை தொடர்ந்து எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் கௌரவமாக நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அவருக்கு வயது குறைவு என்பதால் பலரும் அப்போது அவரை ஏமாற்றி விட்டனர். அதில் அவர் கூறும்பொழுது நான் எந்த ஒரு திரைப்படத்திற்கு சென்றாலும் அந்த படத்திற்கான பணத்தையும் படத்தில் நடிப்பதற்கான காட்சிகள் குறித்த விவரங்களையும் எனது தந்தையிடம்தான் கூறுவார்கள்.

இப்படி ஆரம்பத்தில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க நான் சென்றபோது அங்கு என்னை அரை நிர்வாணமாக நடிக்குமாறு கூறினார்கள். ஆனால் அதற்கு நான் ஒப்புக் கொள்ளவில்லை மேலாடை இல்லாமல் அத்தனை ஆண்களுக்கு முன்பு எப்படி நடிக்க முடியும்.

சோக பக்கங்கள்

ஆனால் அவர்கள் இது குறித்து என் அப்பாவிடம் ஏற்கனவே கூறிவிட்டதாக கூறி எண்னை மிரட்டி நடிக்க வைத்தார்கள். அந்த காட்சிகளில் நடிக்கும் போது நான் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன். அதற்கு பிறகு இது குறித்து நான் எனது தந்தையிடம் போய் கூறினேன்.

ஆனால் என் தந்தை நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்தார் படத்தில் நடிக்க கூடாது என்பதற்காக சாக்கு சொல்கிறேன் என்று நினைத்தார். இந்த நிலையில் இனிமேல் நான் நடிக்கும் படங்களுக்கு எல்லாம் என்னென்ன காட்சிகளில் நடிப்பேன் என்ற விவரங்களை நான் தான் கூறுவேன் என்று எனது அப்பாவிடம் கூறிவிட்டேன். அதற்கு பிறகு நான் நடித்த எந்த படத்திலும் மேலாடை இன்றியோ அல்லது பிறந்து மேனியிலோ நான் நடித்து பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகிலா.

To Top