Connect with us

ஏற்கனவே திருமணம் ஆன நடிகருடன் டேட்டிங்.. இரண்டாம் தாரமாக செல்கிறாரா சாய்பல்லவி.. அதிர்ச்சியடையும் ரசிகர்கள்!.

sai pallavi

News

ஏற்கனவே திருமணம் ஆன நடிகருடன் டேட்டிங்.. இரண்டாம் தாரமாக செல்கிறாரா சாய்பல்லவி.. அதிர்ச்சியடையும் ரசிகர்கள்!.

Social Media Bar

Sai Pallavi: தன்னுடைய நடிப்பு மற்றும் நடனத்தால் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற ரசிகர்களையும் தன் வசப்படுத்தி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி. இன்று பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்கும் நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. சாய் பல்லவி நடிகையாக மட்டுமல்லாமல் அவர் ஒரு மருத்துவரும் கூட.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும், முதலில் அவர் அறிமுகமான படம் பிரேமம் என்னும் மலையாள படமாகும். பிரேமம் படத்தில் அறிமுகமாகிய பின்பு சாய் பல்லவியை திரையுலகம் கண்டு கொண்டது. இவரின் நடிப்பை பார்த்த திரையுலகம் யார் இந்த பெண் என தேட தொடங்கினார்கள்.

அந்த அளவிற்கு சாய் பல்லவியின் நடிப்பு மற்றும் நடனம் அந்த படத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது.

பிரேமம் நாயகி சாய் பல்லவி

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் முக்கிய நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் மூன்று நாயகிகள். இந்த படத்தில் நடித்த மடோனா செபாஸ்டியன், அனு பமா பரமேஸ்வரன் மற்றும் சாய் பல்லவி ஆகியோருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Sai Pallavi

அதிலும் சாய் பல்லவி கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக அமைந்தது. மேலும் மலையாள மொழியில் அதிக நாட்கள் ஓடிய படங்களில் பிரேமம் படமும் ஒன்றாக இருந்தது.

மேலும் இந்த திரைப்படம் தமிழில் அனைவராலும் ரசிக்கப்பட்டு தற்பொழுது அனைவரின் ஃபேவரட்டாக பிரேமம் திரைப்படம் இருக்கிறது.

இந்த படத்தின் மூல பிரபலமான சாய் பல்லவிக்கு தெலுங்கிலும், தமிழிலும் நிறைய பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. ஆனாலும் கவர்ச்சியில் நடிக்காத சாய் பல்லவி தற்போது வரை அதனை கடைப்பிடித்து வருகிறார்.

மேலும் அவர் சமீபத்திய பேட்டிகளில் எல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு சில விளம்பரங்களிலும் நான் நடிக்க மாட்டேன் எனவும் கூறியிருக்கிறார். பல விருது விழா போன்ற நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொள்ளும் போதெல்லாம் புடவை அணிந்துதான் கலந்து கொள்ளுவார். இது போன்ற காரணங்களால் சாய் பல்லவியை ரசிகர்கள் ரசித்தார்கள்.

சர்ச்சையில் சாய் பல்லவி

பெரும்பாலும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருக்கும் சாய் பல்லவி அவ்வப்போது ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கம் தான். அந்த வகையில் தற்பொழுது அவரைப் பற்றி வெளிவந்திருக்கும் ஒரு செய்தி அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாய் பல்லவி ஒரு நபருடன் டேட்டிங் செய்து வருவதாகவும், அவருக்கு முன்னதாக திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் ஒரு பிரபலமான நடிகர் எனவும் செய்திகள் பரவி வருகிறது.

ஆனால் இதுவரை இந்த வதந்திகளுக்கு சாய்பல்லவி எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

To Top