Tamil Cinema News
ஹோம்லி ரோலா தறாங்க.. அந்த மாதிரி நடிக்க ஆசை! – ஓப்பனாக ஆசையை சொன்ன சாய் பல்லவி!
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சக்கைப்போடு போட்டு வருபவர் நடிகை சாய் பல்லவி. டான்ஸ் ஷோக்களில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் காட்டிய சாய்பல்லவி அதில் பல விருதுகளையும் வென்றார்.
மலையாளத்தில் அல்பொன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த ப்ரேமம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார் சாய் பல்லவி.
அதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அவர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் மாரி 2 படத்தில் நடித்தவர் தெலுங்கில் ஷ்யாம் சிங்கா ராய், விராட பர்வம் போன்ற சிறப்பான கதைகளம் கொண்ட படங்களில் நடித்தார். தமிழில் வெளியான ‘கார்கி’ படமும் முக்கியமான கதைகளமாக சாய் பல்லவிக்கு அமைந்தது.

தொடர்ந்து சீரியஸான கதைகளங்களில் நடித்து வரும் சாய்பல்லவிக்கு முழுவதும் காமெடியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ரொம்ப நாள் ஆசையாம். இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர் “நான் நடித்த பெரும்பான்மையான படங்கள் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள்தான். நடனத்தின் மூலம் எனக்கு பல படங்கள் நல்ல பெயர் கொடுத்தன.
ஆனால் இதையெல்லாம் தாண்டி வித்தியாசமான ஒரு நல்ல காமெடியான படத்தில் நடிக்க எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்த படத்தில் முழுவதும் எனக்கு காமெடியான ஒரு ரோல் தர வேண்டும்.
அப்படியான கதையை யாராவது சொன்னால் உடனே ஓகே சொல்லிவிடுவேன்” என கூறியுள்ளார். நடனத்தில் கலக்கும் சாய் பல்லவி விரைவில் காமெடியிலும் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.
