ஒரு அளவுக்குதான் பொறுமை..! பிரபல பத்திரிக்கையால் கடுப்பான சாய்ப்பல்லவி..! அப்ப அது உண்மை இல்லையா..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளின் மிக முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. சாய் பல்லவியை பொருத்தவரை முக்கியமான கதாபாத்திரங்களாக இருந்தால் மட்டும்தான் அந்த திரைப்படத்தில் அவர் நடிப்பார்.

சும்மா வந்துவிட்டு செல்லும் கதாநாயகியின் கதாபாத்திரம் என்றால் அதில் சாய் பல்லவி பெரிதாக நடிக்க மாட்டார். இப்படியான கதை தேர்ந்தெடுப்புகளின் காரணமாக நிறைய படங்களில் சாய் பல்லவிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது.

ஆனாலும் கூட அவர் நடிக்கும் குறைவான படங்கள் கூட அவருக்கு அதிக வரவேற்பு பெற்று தருகிறது. தமிழில் மாரி 2, கார்கில், அமரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு முக்கியமான திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

சாய்பல்லவி வளர்ச்சி:

அமரன் திரைப்படத்திற்கு பிறகு சாய் பல்லவி சம்பளம் உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் அடுத்து பாலிவுட்டில் வெளியாக இருக்கும் ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிக்கிறார் சாய்பல்லவி.

sai pallavi
sai pallavi
Social Media Bar

இதன் மூலமாக இந்திய அளவில் அவருக்கு மார்க்கெட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பொதுவாக பாலிவுட் சினிமாவில் என்றாலே கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்கிற ஒரு விஷயம் இருக்கும். ஆனால் சாய் பல்லவி சீதையாக நடிக்க செல்வதால் அந்த பிரச்சனையே அவருக்கு கிடையாது.

இந்த நிலையில் இதை போல பாலகிருஷ்ணா உடன் சேர்ந்து ராமாயண கதையில் நயன்தாரா சீதையாக நடித்தார். அப்பொழுது நயன்தாரா படப்பிடிப்பு முடிவு வரையில் அசைவம் எதுவும் சாப்பிடாமல் இருந்தார். தற்சமயம் அதை விரதத்தை சாய் பல்லவியும் கடைபிடிப்பதாக நிறைய பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.

கடுப்பான சாய்பல்லவி:

இந்த நிலையில் இதனால் கடுப்பான சாய்பல்லவி தொடர்ந்து வதந்திகளை பரப்பாதீர்கள் என்று விமர்சனம் செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். மேலும் பிரபல ஊடகம் ஒன்று போட்ட பதிவையும், அதோடு சேர்த்து போட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து அந்த ஊடகத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். எனவே இதற்காக சாய்பல்லவி எதுவும் விரதம் இருக்கவில்லை என இதன் மூலம் உறுதியாகிறது.