10 வயசுல எனக்கு வந்த ஆசை… ஒரு தடவையாவது வாழ்நாளில் பண்ணிடனும்.. சாய் பல்லவியின் அந்த ஆசை என்ன தெரியுமா?
தமிழில் அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. முதன்முதலாக மலையாளத்தில் பிரேமம் என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி.
அதனை தொடர்ந்து சாய் பல்லவிக்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரிக்க துவங்கின. பிறகு தெலுங்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளைப் பெற்று வந்த சாய் பல்லவி தொடர்ந்து தமிழிலும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.
தமிழில் மாநாடு 2 கார்கி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அவருக்கு வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது. தற்சமயம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி.
சாய் பல்லவியின் ஆசை:
இந்த நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது. அதில் பேசிய சாய் பல்லவி கூறும் பொழுது எனக்கு சிறுவயதிலிருந்தே மணிரத்தினம் சாரை மிகவும் பிடிக்கும்.
எனக்கு பத்து வயதாக இருக்கும் பொழுது மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தை பார்த்தேன். அந்த திரைப்படம் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது இந்த மாதிரி நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்துதான் படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அந்த பத்து வயதிலேயே எனக்கு மணிரத்னம் சார் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இப்போது வரை அது எனது வாழ்நாள் கனவாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். கண்டிப்பாக இதை பார்க்கும் மணிரத்தினம் அடுத்த படங்களில் சாய் பல்லவிக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று இது குறித்து ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.