Connect with us

இரவு பகல் தூங்காம விடாமல் வேலை வாங்குனாங்க!.. கண்ணீர் விட்ட சாய் பல்லவி…

News

இரவு பகல் தூங்காம விடாமல் வேலை வாங்குனாங்க!.. கண்ணீர் விட்ட சாய் பல்லவி…

Social Media Bar

மலையாள சினிமா மூலமாக அறிமுகமாகி தற்சமயம் தமிழ் தெலுங்கு என தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக இருந்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இருந்து வருகின்றன.

இப்போதும் தமிழில் சாய் பல்லவிக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அந்த அளவிற்கு கடுமையாக உழைக்க கூடியவர் சாய் பல்லவி. ஆனால் அவரே கண்ணீர் விடுமளவிற்கு வேலை வாங்கிய சம்பவமும் நடந்துள்ளது.

ஷியாம் சிங்கா ராய் என்கிற திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்து வந்தப்போது தினமும் நடு ராத்திரி வரை அவர் நடிக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் பகலிலும் கார்கி என்கிற திரைப்படத்தில் நடித்தார் சாய் பல்லவி.

இதனால் சாய் பல்லவிக்கு ஓய்வே இல்லாமல் போனது. இப்படியே தொடர்ந்து 30 நாட்கள் நடித்த சாய் பல்லவி ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அழத் துவங்கிவிட்டார். அதன் பிறகு விஷயத்தை அறிந்த படக்குழுவினர் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்.

To Top