Actress Sai Pallavi failed in a Tamil film after taking Dhanush’s advice
தமிழில் தற்சமயம் வரவேற்பு பெற்று வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை சாய் பல்லவி. எப்போதுமே சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்களுக்கு இங்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது.
ஏனெனில் பெரிதாக மேக்கப் எதுவும் இல்லாமல் இயல்பாக நடிக்க கூடியவர் சாய் பல்லவி. அதனால்தான் முதல் திரைப்படத்திலேயே அவருக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தது. அவரது முகத்தில் அதிகமாக பரு இருப்பதைக் கொண்டு சிலர் உருவாக்கேலி செய்தாலும் கூட வெகுவான மக்கள் அவருக்கு ஆதரவாக தான் இருக்கின்றனர்.
மேலும் அவர் நடிப்பில் வெளியான கார்கி என்கிற திரைப்படம் தமிழில் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செல்வராகவன் திரைப்படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் சாய் பல்லவி.

உண்மையை பகிர்ந்த சாய்ப்பல்லவி:
அதில் அவர் கூறும்பொழுது என்.ஜி.கே திரைப்படத்தில் நடிக்கும் போது ஒவ்வொரு காட்சியிலும் முடிந்த பிறகு அது குறித்து எதுவுமே செல்வராகவன் என்னிடம் கூற மாட்டார். ஒரு காட்சியில் நன்றாக நடித்திருக்கிறோமா என்பது இயக்குனர் சொன்னால்தான் நமக்கே தெரியும்.
ஆனால் செல்வராகன் எதுவுமே கூற மாட்டார். இதனால் படத்திலிருந்து வெளியேறலாம் என்று இருந்தேன். இந்த நிலையில் தனுஷ் ஒரு நாள் வந்து என்னிடம் பேசினார். அப்பொழுது அவரிடம் இந்த பிரச்சினையை கூறினேன்.
உடனே அவர் செல்வராகவன் அப்படித்தான் இருப்பார் கண்டு கொள்ளாதீர்கள். படம் முடிந்த பிறகு நன்றாக இருக்கும் என்று கூறினார். சரி என்று நானும் நடித்தேன்என்று சாய் பல்லவி பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள் அப்பொழுதே சாய் பல்லவி தனுஷ் பேச்சை கேட்காமல் இருந்திருந்தால் என்.ஜி.கே என்கிற தோல்வி படத்தில் இருந்து தப்பித்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.