ஷாரூக்கான் படத்தில் தோன்றிய சல்மான்கான்! – கத்தி கதறிய ரசிகர்கள்!

Pathaan

பதான் படத்தின் ஒரு காட்சியில் ஷாரூக்கான், சல்மான்கான் இணைந்து தோன்றியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள ஆக்‌ஷன் படம் பதான். இதில் ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் சித்தார் ஆனந்த் இயக்கியுள்ளார். இதற்கு முன்னர் சித்தார்த் ஆனந்த் இயக்கிய ஏக் தா டைகர், வார் படங்களின் தொடர்ச்சியாக பதான் படம் உருவாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்களில் ஷாரூக்கான், சல்மான்கான், ரித்திக் ரோஷன் உள்ளிட்டோரை இணைக்கும் விதமாக படங்களை எடுத்து வருகிறார் சித்தார்த் ஆனந்த். இந்நிலையில் பதான் படத்தின் க்ளைமேக்ஸில் சல்மான்கான் (டைகர்) ஷாரூக்கானுடன் (பதான்) இணைந்து சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளுக்கு இரு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாடி தீர்த்துள்ளனர்.

அடுத்த படத்தில் ஷாரூக்கான், சல்மான்கான் இணைந்து தோன்ற உள்ளதாக கூறப்படுவதால் தமிழில் லோகேஷ் யுனிவர்ஸ் போல இந்தியில் சித்தார்த் ஆனந்த் யுனிவர்ஸுக்கு ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர்.

Tags:

Refresh