Connect with us

சோபிதா துலிபாலா வெர்சஸ் சமந்தா.. சொத்து விஷயத்தில் யாரு பெரிய கை தெரியுமா?

samantha sobhita

News

சோபிதா துலிபாலா வெர்சஸ் சமந்தா.. சொத்து விஷயத்தில் யாரு பெரிய கை தெரியுமா?

Social Media Bar

தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் ஹாட் டாபிக்காக மாறி இருக்கும் விஷயம்தான் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்.

நாகர்ஜுனா வீட்டில் எளிமையாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தம் புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

யாரும் எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இவர்களின் நிச்சயதார்த்தம். நடிகர் நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா அவரின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனைப் பார்த்த நெடிசன்கள் பலரும் தற்போது சோபிதா துலிபாலாவை பற்றி இணையதளங்களில் தேட தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பையும், நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியான நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பையும் ஒப்பிட்டு தற்போது சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறது.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா ஆரம்பத்தில் தமிழ் திரைப்படமான மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ஒரு படம் நடித்து அது மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் அவர் தெலுங்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டார். தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த சமந்தா தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல், பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

samantha

இந்நிலையில் சமந்தா தற்பொழுது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக இருந்து வருகிறார். சினிமா மட்டுமல்லாமல் பல விளம்பர படங்களில் நடித்து வரும் சமந்தா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சோபிதா துலிபாலா

மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சோபிதா துலிபாலா ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவராவார். மேலும் இவர் ஃபெமினா மிஸ் இந்தியா 2013 என்ற பட்டத்தை பெற்றார். மாடலாக தன்னுடைய வாழ்க்கை தொடங்கிய போது பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார்.

Sobhita Dhulipala

அதன் பிறகு இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானார். அமேசான் வீடியோ நாடகத் தொடராக வெளிவந்த மேட் இன் ஹெவன் என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

சமீபத்தில் கூட தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார். இந்நிலையில் சமந்தா மற்றும் சோபிதா துலிபாலா இருவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை நெட்டிசன்கள் இணையதளத்தில் தேட ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகை சமந்தா மற்றும் சோபியா துலிபாலா சொத்து மதிப்பு

நடிகை சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு 7 கோடி முதல் 10 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சமந்தாவின் சொத்து மதிப்பு 80 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது தான் பட வாய்ப்புகள் சோபிதா துலிபாலாவிற்கு வரத் தொடங்கியுள்ள நிலையில், சமந்தா பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் இருவரின் சொத்து மதிப்பையும் விமர்சித்து நெடிசன்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

To Top