News
சமந்தா கொளுத்தி போட்ட நெருப்பு.. பற்றி எறியும் தெலுங்கு சினிமா.. 16 வயது பெண் செய்த காரியம்.!
தற்சமயம் தென்னிந்தியாவில் அதிகமாக பற்றி எரியும் ஒரு விஷயமாக பாலியல் தொடர்பான விஷயங்கள் இருந்து வருகின்றன. தொடர்ந்து நடிகைகளுக்கு நடந்து வரும் பாலியல் தொடர்பான விஷயங்கள் வெளி உலகத்திற்கு தெரிய தொடங்கி இருக்கின்றன.
ஏற்கனவே கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு இந்த விஷயங்களை வெளிக்கொண்டு வந்து கொண்டிருப்பது பலரது ஆதரவை பெற்று இருக்கிறது. பல நடிகைகள் இதுகுறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமந்தா ஓப்பன் டாக்:
இந்த நிலையில் சமந்தா வெளியிட்ட ஒரு கருத்து தற்சமயம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஹேமா கமிட்டிக்கு வாழ்த்து தெரிவித்து பல விஷயங்களை கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது இதே மாதிரி வாய்ஸ் ஆப் வுமன் என்கிற ஒரு கமிட்டி 2019 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவிலும் உருவாக்கப்பட்டது ஆனால் இப்பொழுது வரை அவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கில் உள்ள நடிகை ஒருவர் தன்னை தொடர்ந்து ஜானி மாஸ்டர் பலாத்காரம் செய்து வந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறார் அவருக்கு 16 வயதாக இருக்கும் போதிலிருந்த ஜானி மாஸ்டர் இதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமந்தாவின் இந்த பதிவு தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்த துவங்கி இருக்கிறது.
