சினிமாவை விட்டே போகிறாரா சமந்தா? – அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் சமந்தா. தொடர்ந்து பெரும் நடிகர்களோடு திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்சமயம் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் அவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்தன. ஆனால் அவருக்கு ஏற்பட்ட மையோசிட்டிஸ் என்ற நோயின் காரணமாக தற்சமயம் உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் சமந்தா.

இதனால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தமிழில் ஜெயிலர், தளபதி 67 போன்ற பெரும் படங்களில் சமந்தாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு சினிமாவிலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் ஒரு படம் நடிக்க இருந்தார் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்க இருந்தார்.

உடல் நல குறைவால் அனைத்து படங்களையும் நிராகரித்துள்ளார் சமந்தா. இந்த நோயில் இருந்து சரி ஆவதற்கு வெகு நாட்கள் பிடிக்கும் என கூறப்படுகிறது. மேலும் நோயில் இருந்து சரி ஆனாலும் கூட இழந்த உடல் ஆரோக்கியத்தை பெற வெகு நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே சமந்தா அதிகமாக உடல் எடையை இழந்துள்ளார். எனவே நோய் குணமானாலும் கூட இழந்த ஆரோக்கியத்தை பெற நாட்கள் எடுக்கும் என்பதால் இனி அவர் திரும்ப திரைப்படங்கள் நடிக்க வருவதே சந்தேகம் என கூறப்படுகிறது.

அதற்கு ஏற்றாற் போல யசோதாவிற்கு பிறகு சமந்தா சமூக வலைத்தளங்களிலும் கூட ஆக்டிவாக இல்லை என கூறப்படுகிறது.

Refresh