News
தொடர்ந்து வரும் வாய்ப்புகள்! – பண மழையில் லவ் டுடே நடிகை!
முன்பெல்லாம் கதாநாயகிகள் அதிக சம்பளம் வாங்கும் நிலைக்கு வருவது என்பது பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் இருக்கும் சமூக வலைத்தளங்களே அவர்களை பெரிதாக ட்ரெண்ட் செய்து விடுகிறது.

நாச்சியார் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா. தற்சமயம் லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். லவ் டுடே இவருக்கு நல்ல வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார் இவானா.
ஏற்கனவே இவர் ஜிவி பிரகாஷூடன் நடித்து வரும் படம் முடிவடையும் நிலையில் உள்ளது. அதற்கு அடுத்து ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 லட்ச ரூபாயை சம்பளமாக வாங்குகிறாராம் இவானா.
அதே போல நிறைய விளம்பர நிறுவனங்கள் இவரை வைத்து விளம்பரங்கள் எடுப்பதற்காக பேசி வருகின்றனர். இதை தொடர்ந்து ஒரு நான்கு விளம்பரங்களுக்கு நடித்து கொடுத்துள்ளார் இவானா. இந்த நான்கு விளம்பரங்களில் நடித்தது மூலம் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.
பான்ஸ் பவுடர் விளம்பரத்திற்கு மட்டும் சம்பளமாக 1.5 கோடி ரூபாய் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. குறைந்த காலத்தில் அதிகம் சம்பாதிக்கும் ஒரு கதாநாயகியாக இவானா மாறியுள்ளார்.
