ஆராரிராரோ கேக்குதம்மா! – அம்மா பாட்டாக அமைந்த வாரிசு மூன்றாவது சிங்கிள்!

வாரிசு துணிவு இரு படங்களும் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பான விஷயங்களாக போய் கொண்டுள்ளன. இரண்டு படங்களுமே வருகிற பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் மிகவும் பரபரப்பாக இருவரும் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே வாரிசு படத்தில் இருந்து ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகின. அதே போல துணிவு படத்தில் இருந்தும் சில்லா சில்லா பாடலும் அதையடுத்து நேற்று முன் தினம் காசேதான் கடவுளடா என்ற பாடலும் வெளியானது.

இந்த நிலையில் இன்று மாலை 5.00 மணிக்கு வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை ட்ரெண்ட் செய்யும் விதமாக தளபதி ரசிகர்கள் #Soulofvarisu என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்சமயம் இந்த பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி இது ஒரு அம்மா பாடல் ஆகும். வாரிசு படத்தில் குடும்ப செண்டிமெண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. கே.ஜி.எஃப் படத்தில் வருவது போல இதிலும் அம்மா செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பாடலை பாடகி சித்ரா பாடலியுள்ளார் ஆராரிராரோ கேக்குதம்மா என்ற இந்த பாடல் தாயின் இழப்பை காட்டும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே வாரிசு படத்தில் கதாநாயகனின் தாய் இறப்பது போலவோ அல்லது அவருக்கு ஆபத்து ஏற்படுவதற்கோ வாய்ப்புகள் இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

Refresh