சமந்தாவின் தற்போதைய நிலை என்ன – வெளிவந்த புகைப்படம்!

பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சமந்தா. குறைந்த காலத்திலேயே தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பெரும் கதாநாயகர்களோடு நடித்தவர்.

கடந்த சில மாதங்களாக சமந்தா உடல்நல பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின்போதுதான் பலரும் மீண்டும் சமந்தா ரசிகராக ஆனார்கள். ஆனால் அதற்கு பிறகு அவருக்கு இந்த மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது.

இறுதியாக யசோதா திரைப்படம் வந்த பிறகு இவரால் சுத்தமாக படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் விஜய் அஜித் மாதிரியான பெரிய நடிகர்களோடு இருந்த வாய்ப்பை எல்லாம் இழந்தார் சமந்தா. அவருக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் குறைந்து வருவதாக கூறப்பட்டது.

இதனால் தென் கொரியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. இந்த நிலையில் சில காலங்களுக்கு பிறகு தற்சமயம் சிரித்த வண்ணம் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா. அதில் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அவர் உடல் நலம் சரியாகி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் கூட அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Refresh