பார்த்தவுடன் காதல் கொண்ட எம்.ஜி.ஆர்! – எம்.ஜி.ஆர் ஜானகி காதல் கதை!

இப்போது பல நடிகர்கள் படத்தில் நடிக்கும்போது, அதில் நடிக்கும் நாயகி மீது காதல் ஏற்பட்டு அவர்களை திருமணம் செய்துக்கொள்வதை பார்க்க முடிகிறது.

நடிகர் சூர்யா, அஜித், கெளதம் கார்த்தி இன்னும் பல நடிகர்கள் அப்படிதான் திருமணம் செய்துள்ளனர். ஆனால் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலத்திலும் இதே போல சில காதல் கதைகள் நிகழ்ந்துள்ளன. அதில் ஜெமினி கணேசன், சாவித்திரி கதை பலருக்கும் தெரிந்த கதையாக இருக்கும்.

ஆனால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடையதும் கூட அப்படி ஒரு காதல் கதைதான் என்பது உங்களுக்கு தெரியுமா? எம்.ஜி.ஆர் சினிமாவில் வந்த புதிதில் அதில் பெரும் நாயகராக இருந்தவர் தியாகராஜ பாகவதர். இவர் காலத்திற்கு அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்தான் எம்.ஜி.ஆர்

அப்போது தியாகராஜ பாகவதர் ராஜமுக்தி என்கிற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜானகி என்கிற பெண் நடித்தார். அப்போது அங்கு வந்த எம்.ஜி.ஆர் ஜானகியை பார்த்து அவர் மீது காதல் கொண்டார்.

மேலும் இந்த விஷயத்தை அவர் தியாகராஜ பாகவதரிடமும் தெரிவித்தார். இதையறிந்த பாகவதர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு அந்த காதல் இருவருக்கும் இடையே நீடித்து திருமணமும் செய்துக்கொண்டனர்.

Refresh