Connect with us

சமந்தாவுக்கு கிஃப்ட் கொடுத்த காதலர்… ஓ விஷயம் அப்படி போகுதா?..

News

சமந்தாவுக்கு கிஃப்ட் கொடுத்த காதலர்… ஓ விஷயம் அப்படி போகுதா?..

Social Media Bar

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில்தான் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் பானா காத்தாடி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சமந்தா. சென்னை சேர்ந்த சமந்தாவிற்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் குறைவாகதான் கிடைத்தன.

தெலுங்கில்தான் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் தெலுங்கில் அவர் நடித்த நான் ஈ திரைப்படம் தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்தது. அந்த திரைப்படம் மூலம் தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் சமந்தா.

சமந்தாவுக்கு வந்த வரவேற்பு:

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின தமிழில் பெரும் நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் சமந்தா. மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டார் சமந்தா.

samantha
samantha

இருந்தாலும் அவருக்கு இடையில் ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனது சொல்ல போனால் தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவை விடவே சமந்தாவுக்கு அதிக ரசிகர்கள் உண்டு என்று ஒரு பேச்சு உண்டு.

அதற்கு தகுந்தார் போல காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற திரைப்படம் வெளியான போது அதில் நயன்தாராவும் சமந்தாவும் சேர்ந்து நடித்திருந்தனர் அதில் முக்கால்வாசி ரசிகர்கள் சமந்தாவுக்காகவே அந்த திரைப்படத்தை பார்த்தார்கள் என்று ஒரு பேச்சு உண்டு.

இந்த நிலையில் திருமண வாழ்க்கையை பொருத்தவரை சமந்தாவிற்கு அவ்வளவு மோசமான திருமண வாழ்க்கை அமையவில்லை. பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவை திருமணம் செய்தார் சமந்தா.

விவாகரத்து:

திருமணம் ஆகி சில காலங்களிலேயே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து விவாகரத்து பெற்றார் சமந்தா. ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு பேட்டியிலும் நாக சைதன்யா குறித்து சமந்தா பேசியதே கிடையாது.

ஆனால் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டது. இந்த நோய் பட்ட நாட்களில் அதிகமாக அவர் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சமந்தா தனது முன்னாள் கணவர் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறும்போது நாகசைதன்யா எனக்கு பிடித்த வரிகளை பிரிண்ட் செய்து அதை எனக்கு பரிசாக வழங்கினார் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத பரிசு அது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் திரும்பவும் நாகசைதன்யாவுடன் சேர்வதற்கு விருப்பம் தெரிவிக்கிறாரா சமந்தா என்று கேள்விகள் எழுந்து வருகின்றன.

To Top