Connect with us

விஜய் கட்சிக்குதான் என் சப்போர்ட்!.. அதை செய்யுற தைரியம் தளபதிக்குதான் உண்டு.. சமுத்திரக்கனி ஓப்பன் டாக்!.

vijay samuthrakani

News

விஜய் கட்சிக்குதான் என் சப்போர்ட்!.. அதை செய்யுற தைரியம் தளபதிக்குதான் உண்டு.. சமுத்திரக்கனி ஓப்பன் டாக்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருக்கும் பலர், தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திய சமுத்திரக்கனி பல படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், படங்களில் முக்கிய இயக்குனராக வலம் வரும் சமுத்திரக்கனி, தற்போது விஜய் தொடங்கியிரும் அரசியல் கட்சி பற்றி கூறியிருக்கும் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அரசியலில் களம் இறங்கும் விஜய்

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் விஜய் தற்போது இறுதியாக தளபதி 69 இல் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் அவரின் நடிப்பில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் கோட் படம் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களுகிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் மீதான ஆர்வம் எழுந்துள்ளது. விஜயின் இறுதி படங்கள் என்பதால் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கிறார்கள்.

vijay

சினிமாவில் தற்போது அதிகளவு சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் படங்களில் இனி நடிப்பதை விட்டுவிட்டு முழு நேரமாக அரசியல்வாதியாக களம் இறங்க காத்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருப்பதாகவும், இனி முழு நேர அரசியல்வாதியாக தான் களமிறங்க போவதாகவும் படங்களில் இனி நடக்க மாட்டேன் என கூறி இருந்தது ரசிகர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தினாலும், அரசியல்வாதியாக இனி விஜயை பார்க்கலாம் என்பதால் சற்று ஆறுதல் அடைந்தார்கள்.

விஜய்க்கு சப்போர்ட் செய்யும் சமுத்திரக்கனி

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சமுத்திரக்கனி அனைவரின் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு சப்போர்ட் செய்ய காரணம் என்ன என கேட்டிருந்தனர்.

samuthra kani

அதற்கு பதிலளித்த சமுத்திரக்கனி விஜய்க்கு இப்பவே 200 கோடி சம்பளம் வாங்குகிறார். அப்படி என்றால் சினிமாவில் அவரால் எவ்வளவு சம்பாதிக்க முடியும். ஆனால் அதை அனைத்தையும் விட்டு விட்டு அரசியலுக்கு வருகிறேன் என கூறுவதற்கே ஒரு தனி தைரியம் வேண்டும்.

தெலுங்கில் பவண் கல்யாணை சந்தித்தேன். அவர் கூட கையில் 3 படங்கள் வைத்துக்கொண்டு தான் நடித்து வருகிரார். ஆனால் விஜய்யை பொறுத்தவரை மக்கள் பணி செய்வதற்காக தனது தொழிலை விட்டிருக்கிறார் என பேசியிருந்தார் சமுத்திரக்கனி.

To Top