Tamil Cinema News
தாயின் மாரை அ*த்து எப்படி சாப்பிட முடியும்… சூர்யா விவகாரத்தில் காட்டமான பதில் அளித்த சமுத்திரகனி..!
இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிற்கு வந்து 25 ஆண்டு காலம் முடிவடைகிறது. அதே சமயம் அவரது இயக்கத்தில் வணங்கான் திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது.
இது இரண்டையும் கொண்டாடும் விதத்தில் விழா ஒன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் கடந்த காலத்தில் பாலாவுடன் பணியாற்றிய பலரும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் சூர்யா, மணிரத்தினம், பாக்யராஜ் உள்ளிட்ட நிறைய பிராபலங்கள் இதில் கலந்துகொண்டனர். முக்கியமாக நடிகர் சமுத்திரகனி இதில் கலந்துகொண்டிருந்தார்.
சூர்யா குறித்து சமுத்திரக்கனி:
இந்த திரைப்படத்திற்காக பேச வந்த சமுத்திரகனி மேடையில் கொந்தளித்து சூர்யாவிற்கு ஆதரவாக நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அவர் கூறும் பொழுது குழந்தைக்கு பால் கொடுத்து பசியை ஆற்றுவது தாய் தான்.
ஆனால் அவளின் மாரை அறுத்து பசியை ஆற்றுவது எப்படி சாப்பிட முடியும். அதே போல்தான் தமிழ் சினிமாவை நம்பி பிழைப்பு நடத்துகிற சிலரே கங்குவா படத்தையும் தம்பி சூர்யாவையும் கடுமையாக விமர்சித்தனர்.
அந்த பணத்தில் எப்படிதான் சாப்பிடுகிறார்களோ என தெரியவில்லை சூர்யா ஒரு சாதாரணமான ஆள் கிடையாது. அவர் நெருப்பில் எரியும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் அவர் எழுந்து வந்து விடுவார் அவர் செய்த நன்மைகளை எல்லாம் மறந்து விட்டு இவர்கள் எப்படி கேலி செய்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறி இருக்கிறார் சமுத்திரக்கனி.