Connect with us

20 வருஷமா கேப்டன் என்ன பண்ணுனாருன்னு யாருக்கும் தெரியாது!.. விஜயகாந்த் குறித்து சமுத்திரகனி கூறிய ரகசியம்!.

samuthrakani vijayakanth

News

20 வருஷமா கேப்டன் என்ன பண்ணுனாருன்னு யாருக்கும் தெரியாது!.. விஜயகாந்த் குறித்து சமுத்திரகனி கூறிய ரகசியம்!.

Social Media Bar

Vijayakanth: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பெரும் வெற்றியை கொடுத்து வந்ததால் இளமை காலங்களில் விஜயகாந்திற்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வந்தது.

ஒரு வருடத்தில் அதிகமான திரைப்படங்கள் நடித்த பெரும் நடிகராக விஜயகாந்த் பார்க்கப்படுகிறார் .விஜயகாந்த்தை வைத்து நிறைய இயக்குனர்கள் படம் இயக்கி உள்ளனர். முக்கியமாக அறிமுக இயக்குனர்களுக்கு விஜயகாந்த் நிறைய வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

Vijayakanth-1-1
Vijayakanth-1-1

அதிகபட்சம் கதையை மட்டும்தான் கேட்பார். அந்த கதை அவருக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு விடுவார் விஜயகாந்த். இப்படி அவர் எக்கச்சக்கமான நபர்களை வாழ வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி விஜயகாந்துடன் அவரது அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். விஜயகாந்த்தை வைத்து சமுத்திரகனி இயக்கிய திரைப்படம் நெறஞ்ச மனசு. இந்த திரைப்படம் சமுத்திரகனியின் இரண்டாவது திரைப்படமாகும்.

விஜயகாந்தின் திட்டம்:

இருந்தாலும் கூட விஜயகாந்த் அந்த திரைப்படத்திற்கு சமுத்திரக்கனிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்த நிலையில் சமுத்திரகனி விஜயகாந்த் குறித்து சுவாரசியமான விஷயம் ஒன்றை கூறியிருந்தார். விஜயகாந்த் கட்சி துவங்க வேண்டும் என்று ஆசைப்பட்டது இன்று நேற்று நடந்த நிகழ்வு கிடையாது.

அவர் சினிமாவிற்கு வந்த காலம் முதலே மக்களுக்கு நன்மை செய்வதற்காக கட்சி துவங்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார். எனவே கிட்டத்தட்ட 20 வருடங்களாக வாரம் ஒரு முறை ரசிகர் மன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசி வந்தார்.

இதற்காகவே அவர் நான்கு நபர்களை வேலைக்கு நியமித்து வைத்திருந்தார் வாராவாரம் அவர்கள் ரசிகர் மன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு பிறகு விஜயகாந்த்திடம் வந்து விஷயங்களை தெரிவிப்பார்கள்.

இது 20 வருடமாகவே தொடர்ந்து நடந்து வந்தது. இதை எந்த ஒரு அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலே செய்தது கிடையாது அப்படி கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பப்பட்ட கோட்டைதான் விஜயகாந்தின் கட்சி அதனால் தான் அது இவ்வளவு உறுதியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் சமுத்திரக்கனி.

To Top