News
காபி கப்பை எடுத்து விஜய் அடிச்சதும் நிஜமாவே மண்டை பொளந்துடுச்சு… உண்மையை கூறிய சாண்டி மாஸ்டர்!..
தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்து வருகிறது விஜய் நடித்த லியா திரைப்படம். இந்த திரைப்படத்தில் நிறைய முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் அவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் அனைவருக்குமே ஏதாவது ஒரு வாய்ப்பை கொடுத்துவிடுவார். அந்த வகையில் படத்தில் சின்ன கதாபாத்திரமாவது ஒரு நடிகருக்கு கிடைத்துவிடும்.

இந்த நிலையில் சினிமாவின் மிகவும் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான சாண்டி மாஸ்டர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் விஜய்யுடன் சாண்டி மாஸ்டருக்கு ஒரு பெரும் சண்டை காட்சி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அந்த காட்சிதான் மொத்த படத்திற்கும் முக்கியமான காட்சியாகும். அந்த காட்சியில் விஜய் சாண்டி மாஸ்டரை அடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அப்பொழுது ஒரு காபி கப்பை எடுத்து சாண்டி மாஸ்டர் மண்டையில் உடைப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது.
அதில் நடிக்கும் பொழுது அந்த காபி கப்பை எடுத்து அடித்ததும் நிஜமாகவே சாண்டி மாஸ்டர் தலையில் ரத்தம் வந்துவிட்டதாம். இதை அவர் பேட்டியில் கூறும் பொழுது பொதுவாகவே சண்டைக்காட்சி என்றால் எனக்கு பயம்தான். நான் இதுவரை அந்த மாதிரி காட்சிகளில் நடித்ததில்லை இருந்தாலும் பயந்து கொண்டுதான் நடித்தேன். அதேபோல எடுத்த உடனே மண்டையில் ரத்தம் வரும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்துவிட்டது. என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.
