Tamil Cinema News
அரசியலுக்கு வர்றதுக்கு தயார்தான்… ஓப்பன் டாக் கொடுத்த சந்தானம்..!
காமெடி நடிகராக இருந்தாலும் கூட தனக்கென தனி பாணியை கொண்டு மக்கள் மத்தியில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் சந்தானம். பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்களில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
எனவேதான் தற்சமயம் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இதற்கு பிறகு சிம்பு திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார் சந்தானம்.
இதுக்குறித்து சமீபத்திய பேட்டியில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கும்போது இப்போது சிம்புவுக்கு நட்புக்காக அவரது திரைப்படத்தில் மீண்டும் காமெடியனாக நடித்து வருகிறீர்கள். இதே போல உதயநிதி நட்புக்காக பிரச்சாரம் செய்ய கூப்பிட்டால் செல்வீர்களா? என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சந்தானம் சிம்பு காமெடி கதாபாத்திரத்தில் நடித்தாலும் பழைய காமெடியன் மாதிரியே நடிக்க சொல்லவில்லை. இப்போது என்னால் எந்த மாதிரி காமெடி செய்ய முடியுமோ காட்சிகளை அந்த மாதிரி வைத்துக்கொள்ள விட்டுள்ளார்.
உதயநிதியும் கூட அப்படியான ஒரு ஃப்ரீடெம் கொடுத்தால் கண்டிப்பாக அவருக்காக அரசியலில் சென்றும் பேசுவேன் என கூறியுள்ளார் சந்தானம்.
