News
லாஜிக்கே இல்லையேப்பா!.. இங்க நான் தான் கிங்கு படம் எப்படியிருக்கு!.. பட விமர்சனம்!.
சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதன் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். பெரும்பாலும் சந்தானம் நடிக்கிற திரைப்படங்கள் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களாகவே இருக்கும்.
ஒரு சில திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தாலும் அவருக்கு சில படங்கள் தோல்வியையும் கொடுக்கின்றன. இந்த நிலையில் அவர் நடிப்பில் இன்று ஒங்கு நான் தான் கிங்கு என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் எப்படியிருக்கு என பார்க்கலாம்.
படத்தின் கதை:
படத்தின் கதைப்படி அநாதையாக இருந்து வரும் சந்தானம் எப்படியாவது திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். பொதுவாக திருமணம் செய்துகொள்வது என்றாலே பையனுக்கு வீடு இருக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பதுண்டு.

சந்தானத்திடம் அப்படி ஒரு வீடு இருக்கிறது. ஆனால் அதில் சிக்கல் என்னவென்றால் அந்த வீடு கட்டுவதற்காக 25 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார் சந்தானம். எனவே அந்த கடனை அடைக்க பெண் வீட்டில் 25 லட்சம் கேட்டு வருகிறார்.
அதற்கு ஒப்புக்கொள்ளும் பெண்ணையே திருமணம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில் ஒரு ஜமீன் பரம்பரை பெண்ணை சந்தானம் ஒரு வழியாக திருமணம் செய்கிறார். ஆனால் அந்த பெண் ஜமீன் பரம்பரையே கிடையாது. இந்த நிலையில் அவர்களுக்கும் நிறைய கடன் இருக்கிறது.
இதையெல்லாம் சந்தானம் எப்படி சமாளிக்க போகிறார் என்பதே தெய்வ மச்சான் திரைப்படத்தின் கதையாக இருக்கிறது. நகைச்சுவையை பொறுத்தவரை சில இடங்களில் ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும் கூட பல இடங்களில் இதெல்லாம் நம்புற மாதிரியா சார் இருக்கு என யோசிக்கும் வகையில் இருக்கிறது.
சந்தானத்தின் முந்தைய திரைப்படமான வடக்குப்பட்டி ராமசாமி அளவிற்கு இந்த படத்தில் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றே கூற வேண்டும்.
