Connect with us

நான் கும்புடுற கடவுளுக்கு தெரியும்.. என்ன பத்தி!.. பெரியார் சர்ச்சை குறித்து பதிலளித்த சந்தானம்!..

periyar santhanam

News

நான் கும்புடுற கடவுளுக்கு தெரியும்.. என்ன பத்தி!.. பெரியார் சர்ச்சை குறித்து பதிலளித்த சந்தானம்!..

Social Media Bar

Actor Santhanam: தமிழில் உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் முக்கியமானவர் சந்தானம். சந்தானம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பொழுது அவருக்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தன. தொடர்ந்து நடித்து வந்த சந்தானம் பிறகு திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார.

திரைப்படங்களாக இருந்தாலும் கூட காமெடி திரைக்கதைகளை கொண்ட திரைப்படங்களைதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சந்தானம். பெரும்பாலும் சந்தானம் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்களாகவே இருக்கும்.

ஏனெனில் சந்தானம் சம்பளமும் குறைவாகதான் தற்சமயம் வாங்கி வருகிறார். ஆனால் காமெடியனாக வாங்கிய சம்பளத்தை விடவும் இது அதிகம் என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்து வெளியாகவிருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது தொடர்பாக சில சர்ச்சைகள் உருவாகின.

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் பெரியாருக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாகவும் பெரியாரை கிண்டல் செய்திருப்பதாகவும் பேச்சுக்கள் இருந்தன. இதை தொடர்ந்து சந்தானத்தை அதிகமாக விமர்சித்து வந்தனர் தற்சமயம் படம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்திய சந்தானம் அதில் பேசும் பொழுது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படம.

இதில் நீங்கள் நினைப்பது போல பெரியாரை விமர்சித்து எந்த கருத்துக்களும் இல்லை. எப்போதும் கவுண்டமணி தொடர்பான திரைப்பட பெயர்களை தான் நாங்கள் படத்தில் வைப்போம் அப்படித்தான் இந்த திரைப்படத்திற்கும் வடக்குப்பட்டி ராமசாமி என்கிற ஒரு கதாபாத்திரத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.

மற்றபடி இந்த படத்தில் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தவே நாங்கள் முயற்சி செய்திருக்கிறோமே தவிர யாரையும் புண்படுத்தும் வகையில் இதில் எதுவுமே இல்லை என்னை பற்றி நான் கும்பிடுகிற கடவுளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியும் என்று கூறி இருக்கிறார் சந்தானம்.

To Top