Connect with us

கல்யாணம் பண்ணுவேன்னு தெரியாம பெரிய வேலையா பார்த்துட்டேன்… ராதிகாவிடம் வசமாக சிக்கிய சரத்குமார்!..

radhika sarathkumar

Cinema History

கல்யாணம் பண்ணுவேன்னு தெரியாம பெரிய வேலையா பார்த்துட்டேன்… ராதிகாவிடம் வசமாக சிக்கிய சரத்குமார்!..

Social Media Bar

ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று கதாநாயகனாக நடிக்க துவங்கியவர் நடிகர் சரத்குமார்.

அதன் பிறகு அவர் எக்கச்சக்கமான வெற்றியை திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் ஜெமினி கணேசன் போலவே ஒரு காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தவர் சரத்குமார்.

நடிகை ராதிகாவைதான் இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 7 வருடங்கள் இவர்கள் நண்பர்களாக இருந்தன.ர் நண்பர்களாக இருந்த காலத்தில் எப்போதுமே சரத்குமாருக்கு ராதிகா மீது எந்த ஒரு காதலும் வந்ததே கிடையாது.

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது எனக்கே எதிர்காலத்தில் ராதிகாவை திருமணம் செய்து கொள்வோம் என்று தெரியாது. இதனால் நான் ஒவ்வொரு பெண்ணை காதலிக்கும் பொழுதும் அந்த காதல் கதைகளை எல்லாம் ராதிகாவிடம் பகிர்ந்து கொள்வேன்.

அந்த காதலில் வரும் பிரச்சனைகளையும் அவரிடம்தான் பகிர்ந்து கொள்வேன். ஆனால் எதிர்காலத்தில் அவர்தான் எனக்கு மனைவி ஆவார் என்று தெரிந்திருந்தால் நான் இந்த மாதிரியான விஷயங்களை செய்திருக்க மாட்டேன் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு ராதிகா என்னை புரிந்து கொண்டார். எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு புரிதலை உருவாக்கியது அந்த ஏழு வருட நட்புதான் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் சரத்குமார்.

To Top