Connect with us

சரத்குமார் யுவன் காம்போ – விரைவில் பாடல்கள்

News

சரத்குமார் யுவன் காம்போ – விரைவில் பாடல்கள்

Social Media Bar

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் ஆவார் 90ஸ் காலக்கட்டத்தில் இருந்த பெரும் நடிகர்களில் இவரும் ஒருவர். இப்போது வரை படங்களில் நடித்து வருகிறார். மேலும் வெகு காலங்களாக தனது உடலை சரியாக பேணி வருகிறார்.

தற்சமயம் இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில காலங்களாக அரசியலில் இருந்த காரணத்தால் அவரால் சினிமா துறையில் தொடர்ந்து இயங்க முடியவில்லை.

இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்திருக்கும் பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரம் மீண்டும் சினிமாவில் அவருக்கு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என நம்பப்படுகிறது.

இதற்கிடையே நடிகர் சரத்குமாரும் தெலுங்கு நடிகர் அமிதாஸ் பிரதானும் இணைந்து பரம்பொருள் என்னும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.. அதுக்குறித்த போஸ்டர் தற்சமயம் வெளியாகியுள்ளது.

கூடிய விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளன. எனவே யுவன் வெறியன்களுக்கு நல்ல ட்ரீட் காத்துள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் நடிகர் அமிதாஸ் பிரதான்.

Bigg Boss Update

To Top