ரோட்டுல நின்னேன்.. பஸ்க்கு 5 ரூபா கைல இல்ல.. சரத்குமார் வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்..!

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆகி அதற்கு பிறகு கதாநாயகனாக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகர் சரத்குமார்.

அவரது இளமை காலங்களில் இருந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் சரத்குமார் நடித்திருக்கிறார். இப்பொழுதும் அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது குறையவில்லை.

சரத்குமாரின் அனுபவம்:

sarathkumar
sarathkumar
Social Media Bar

அவர் பல படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெரிதாக உடைந்து போன சமயம் என்றால் எதை கூறுவீர்கள் என்று சரத்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத்குமார் நான் ஒரு திரைப்படத்தை தயாரித்தேன்.

அதன் மூலமாக சொத்துக்களை இழந்தேன். ஒரு கட்டத்தில் பேருந்தில் 5 ரூபாய் கொடுத்துப் போவதற்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார் சரத்குமார். இவ்வளவு பெரிய நடிகரே தயாரிப்பாளராக களம் இறங்கினால் பெரிய ரிஸ்க் இருக்கிறது என்பது இதன் மூலமாக தெரிகிறது.