படை தலைவன் படம் எப்படி இருக்கு.. நடிகர் சரத்குமார் கொடுத்த முதல் விமர்சனம்..!

நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு காலங்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்பது ஆசையாக இருந்து வருகிறது பல வருடங்களுக்கு முன்பு சகாப்தம் என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார். ஆனாலும் அது சண்முக பாண்டியனுக்கு பெரிய வரவேற்பு பெற்று தரவில்லை. விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு சண்முக பாண்டியனின் திரைப்படம் குறித்து சினிமா வட்டாரமும் தமிழ் சினிமா ரசிகர்கள் கூட அதிக ஆர்வத்தை காட்டி வருகின்றனர்.

padai-thalaivan
padai-thalaivan
Social Media Bar

அப்படியாக தற்சமயம் சண்முக பாண்டியன் நடித்துவரும் திரைப்படம் தான் படைத்தலைவன். படைத்தலைவன் திரைப்படத்தை பார்த்த சரத்குமார் அந்த படம் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது தமிழில் ஒரு வித்தியாசமான கதை அமைப்பில் படைத்தலைவன் திரைப்படம் அமைந்திருக்கிறது.

இயக்குனருக்கு என்னுடைய பாராட்டுக்கள் மிகச் சிறப்பாக இந்த திரைப்படத்தை செய்திருக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் குறித்து வரும் காட்சிகள் எல்லாம் மனதை நெருடுவதாக இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.