Tamil Cinema News
அந்த காட்சியில் நடிச்சிருக்க கூடாது.. அசிங்கமா இல்லையானு என் பொண்ணு கேட்டா.. மனம் வருந்திய சரத்குமார்..!
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சரத்குமார். நடிகர் சரத்குமார் தொடர்ந்து சினிமாவில் வரவேற்பை பெறுவதற்கு அவரது முக பாவனைகள் முக்கிய காரணமாக இருந்தது. விஜயகாந்த் சரத்குமாருக்கு அப்போதையை காலக்கட்டத்தில் ஒரே மாதிரியான கதை அம்சத்தில் திரைப்படங்கள் அமைந்து வந்தன.
சரத்குமாரும் விஜயகாந்தும் ஒரே காலக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தனர். ஆனால் சரத்குமார் ஆரம்பத்தில் வில்லனாகதான் நடித்தார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த புலன் விசாரணை திரைப்படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்திருப்பார்.
ஆனால் அதே சரத்குமார் கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு நண்பன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் அதிக வரவேற்பை பெற்று இப்போதும் நடித்து வரும் சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் அவரிடம் நீங்கள் இந்த காட்சியில் நடித்திருக்க வேண்டாம் என நினைத்தால் எந்த காட்சியை கூறுவீர்கள் என கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத்குமார் சிம்மராசியில் கஷ்டப்பட்டு காலில் சலங்கை கட்டிக்கொண்டு ஒரு பாடலுக்கு ஆடினேன்.
அதை இப்போது வைத்து செய்துவிட்டார்கள். அதில் நடித்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன். அதே போல ஏய் படத்தில் அர்ஜுனா அர்ஜுனா என்கிற பாடலில் கதாநாயகி தொப்புளில் இருந்து நீர் எடுத்து துப்புவதாக காட்சிகள் வரும்.
அதை அப்போதே டான்ஸ் மாஸ்டரிடம் வேண்டாம் என கூறினேன். அவர் கேட்கவில்லை. அதை பார்த்த எனது பிள்ளைகள் உனக்கு அசிங்கமா இல்லையாப்பா என என்னை கேட்டனர் என அந்த விஷயத்தை பகிர்ந்திருந்தா சரத்குமார்.