Connect with us

இப்ப உள்ள நடிகர்கள் பண்ணாத விசயத்தை பண்ணினவர் விஜயகாந்த்- ஓப்பன் டாக் கொடுத்த சரத்குமார்..!

Cinema History

இப்ப உள்ள நடிகர்கள் பண்ணாத விசயத்தை பண்ணினவர் விஜயகாந்த்- ஓப்பன் டாக் கொடுத்த சரத்குமார்..!

Social Media Bar

நடிகர் விஜயகாந்தை புகழாத ஆட்களே தமிழ் சினிமாவில் கிடையாது. விஜயகாந்தை அவதூறாக பேசிய ஒரே நபர் நடிகர் வடிவேலு மட்டுமே. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல மதிப்பை பெற்றவர் விஜயகாந்த்.

நடிகர் சரத்குமார் ஒரு பேட்டியில் அக்கால சினிமாவிற்கும், இப்போதுள்ள சினிமாவிற்கும் இடையே உள்ள வேற்றுமைகளை பேசி கொண்டிருந்தார். அந்த காலங்களிலும் இப்போது போன்ற நடிகர்கள் மத்தியில் போட்டிகள் இருந்தனவா? என நடிகர் சரத்குமாரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது கண்டிப்பாக இப்போது போல அப்போது போட்டி இருக்கவில்லை. அதற்கு உதாரணமாக நடிகர் விஜயகாந்தை கூறலாம். நடிகர் விஜயகாந்த் பல படங்களில் ஹிட் கொடுத்து கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான் நானும் வளர்ந்து வரும் நடிகராக இருந்தேன்.

கிட்டத்தட்ட நான் விஜயகாந்த், சத்யராஜ் எல்லாம் போட்டி நடிகர்கள் எனலாம். அந்த சமயத்தில் விஜயகாந்திடம் ஒரு கதை வந்தது. அந்த கதையை கேட்ட விஜயகாந்த். இந்த கதை என்னை விடவும் சரத்குமாருக்குதான் பொருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி எனக்கு போன் செய்து “சரத்குமார் ஒரு கதை கேட்டேன். நன்றாக உள்ளது. நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார். இப்போதைய காலக்கட்டத்தில் எந்த நடிகராவது தனக்கு வரும் கதையை தனது போட்டி நடிகருக்கு கொடுப்பாரா?. எனவே அப்போது அந்த அளவிற்கு போட்டி இல்லை.

To Top