Connect with us

இவங்க பண்ணுன 50 வருஷ அரசியலுக்கு எதிரா நிக்கிறான் என் தம்பி!.. கமல்ஹாசன் குறித்து பேசிய சாருஹாசன்!..

kamalhaasan saruhaasan

News

இவங்க பண்ணுன 50 வருஷ அரசியலுக்கு எதிரா நிக்கிறான் என் தம்பி!.. கமல்ஹாசன் குறித்து பேசிய சாருஹாசன்!..

Social Media Bar

சிறுவயதிலேயே தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகனாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனை பொறுத்தவரை அவர் சாதாரண நடிகர் என்று மட்டும் கூறிவிட முடியாது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் அதிக முயற்சி எடுத்தவர் கமல்ஹாசன்.

ரஜினி கமல்ஹாசன் இருவருக்குமிடையே போட்டி இருந்த பொழுது பெரும்பாலும் இவர்கள் இருவரது திரைப்படங்களுமே நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. ஒரு காலங்கள் சினிமாவில் இருந்த கமல்ஹாசன் அதற்கு பிறகு தனியாக கட்சி ஒன்றை துவங்கினார்.

அவர் கட்சி துவங்குவதற்கு முன்பாகவே அதுக்குறித்து நிறைய பேட்டிகளில் பேசி வந்தார். அரசியல் மூலமாகத்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் தற்சமயம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக கட்சியுடன் கூட்டணி போட்டு இருக்கிறார் கமல்ஹாசன்.

kamalhaasan
kamalhaasan

இந்த நிலையில் கமல் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் அவரது அண்ணன் சாருஹாசன். அதில் அவர் கூறும் பொழுது இந்த 50 ஆண்டுகால அரசியலில் முக்கியமான கட்சிகள் பலவும் பிராமணர்களுக்கு எதிரான விஷயங்களை பேசி தான் மக்களிடம் ஓட்டு வாங்கினார்கள்.

அப்படி இருக்கும் பொழுது பிரமாணனாக பிறந்து இந்த மாநிலத்தில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்று களம் இறங்கி இருக்கிறான் என்னுடைய தம்பி. ஆனால் மக்கள் மனநிலையை பொறுத்தவரை 90 சதவீதம் பேர் நடிகர்களுக்கு ஓட்டு போட தயாராக இல்லை எனவே கமல் ஜெய்ப்பதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு என்று நான் முன்பே கூறியிருந்தேன். ஒருவேளை கமல் தேர்தலில் ஜெயித்தார் என்றால் என்னுடைய கூற்று தவறாகும் அவ்வளவுதான் என்று கூறி இருக்கிறார்.

To Top