Cinema History
இந்த ஹீரோயினை நம்பி மோசம் போயிட்டேனே!.. கண்ணீர் விட்ட இயக்குனருக்கு கை கொடுத்த சாவித்திரி!..
ப்ளாக் அண்ட் ஒயிட் காலங்களில் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் உருவான கதைகள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அந்த மாதிரி 3000 ரூபாய்க்காக உருவான ஒரு கதை தமிழ் சினிமாவில் உருவானது. பணமா பாசமா என்கிற திரைப்படத்தின் பின்னால் அப்படி ஒரு சுவாரஸ்யமான கதை நடந்துள்ளது.
அப்போதெல்லாம் படத்திற்கான கதையை ஒரு ஆள் எழுதுவார்கள். இயக்குனர்கள் படத்தை இயக்கும் வேலைகளை மட்டுமே பார்ப்பார்கள் இந்த நிலையில் அப்போது பிரபலமான கதையாசிரியரான ஜி பாலசுப்பிரமணியன் இயக்குனர் கே.எஸ் கோபாலகிருஷ்ணனிடம் அவசரமாக 3000 பணம் தேவைப்படுகிறது.
அதற்கு பதிலாக உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன் எனக்குக் அந்த 3000 பணத்தை கொடுங்கள் என கூறி அவர் கூறிய கதைதான் பணமா பாசமா படத்தின் கதை. இந்த கதை கே.எஸ் கோபாலகிருஷ்ணனுக்கு பிடித்து போகவே அதை படமாக்க திட்டமிட்டார்.
அந்த வகையில் படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி, எஸ்.வரலெக்சுமி ஆகியோர் நடித்தனர். ஜெமினி கணேசனின் மாமியார் கதாபாத்திரமான வரலெட்சுமிதான் படத்தில் முக்கிய கதாபாத்திரம். ஆனால் அவர் படத்தில் ஒழுங்காகவே நடிக்கவில்லை. ஏனெனில் சில வருடங்கள் அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்ததே அதற்கு காரணமாக இருந்தது.
இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்திற்கு சாவித்திரியை நடிக்க வைப்பதே என முடிவு செய்த இயக்குனர் சாவித்திரியின் உதவியை நாடினார். இந்த நிலையில் கதையை கேட்ட சாவித்திரி நானும் ஜெமினி கணேசனும் கணவன் மனைவியாக இருக்கும்போது நாங்கள் திரைப்படத்தில் மாமியார் மருமகனாக நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே என இயக்குனருக்கு புரியவைத்துள்ளார்.
பிறகு வரலெட்சுமியை அழைத்து அவருக்கு நடிப்பதற்கு பயிற்சி கொடுத்து அந்த படத்தில் நன்றாக நடிக்க வைத்துள்ளார் சாவித்திரி. அந்த படமும் நல்ல வெற்றியை கொடுத்தது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்