Tamil Cinema News
சொல்லுங்க ரஜினி தம்பி… ரஜினிக்கு போன் போட்டு ஷாக் கொடுத்த சீமான்.. பழக்கத்தோஷத்துல..!
தமிழில் தற்சமயம் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அதிலும் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்தது.
வழக்கமான ரஜினி படங்கள் போல இல்லாமல் முக்கியமான சமூக கருத்துக்களை பேசும் படமாக வேட்டையன் படமிருந்தது. இதனால் வேட்டையன் படத்திற்கான வரவேற்பும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் ரஜினிகாந்துக்கு போன் செய்து வாழ்த்தியதாக கூறப்படுகிறது.
அப்போது நடந்த சுவாரஸ்யமான உரையாடல் குறித்த சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சீமான் பட குழுவிற்கு ஃபோன் செய்து வேட்டையன் படத்தின் வெற்றியை குறித்து பேசியிருக்கிறார். அப்பொழுது இருங்கள் ஒரு நிமிடம் நாங்கள் கான்ஃபிரன்ஸ் போடுகிறோம் எனக்கூறி பட குழு ரஜினிகாந்திடம் கான்பரன்ஸ் போட்டிருக்கிறது.
வேட்டையன் பட வெற்றி:
ஆனால் சீமான் அதை சுபாஷ்கரன் என்று நினைத்துக் கொண்டு நல்லா இருக்கீங்களா தம்பி என்று கேட்டிருக்கிறார். உடனே அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் சார் நான் ரஜினி பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே சீமான் அவரிடம் நான் சுபாஷ்கரன் என நினைத்தேன் ஐயா என கூறியுள்ளார்.
பிறகு இந்த மாதிரி சமூகநீதி படங்களை எல்லாம் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று சீமான் ரஜினிகாந்திடம் வலியுறுத்தி இருக்கிறார் ரஜினிகாந்தும் நானும் தொடர்ந்து அந்த மாதிரியான கதைகளை தான் இப்பொழுது தேட துவங்கியிருக்கின்றேன் என்று கூறியிருக்கிறார் எனவே இனி தொடர்ந்து இந்த மாதிரி ரஜினிகாந்த் படங்களை எதிர்பார்க்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.
