Tamil Cinema News
அறிவு இல்லாதவன் தான் அப்படி சொல்லுவான்.. சந்தானபாரதியை நேரடியாக திட்டிய விஜய் சேதுபதி இயக்குனர்..!
பத்திரிக்கையாளர்கள் செய்துவிட்ட வேலையால் தற்சமயம் இரண்டு இயக்குனர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வருபவர் இயக்குனர் சந்தான பாரதி.
அவர் இயக்கத்தில் வெளிவந்த குணா திரைப்படம் இப்போதும் பேசப்படும் படங்களாக இருக்கின்றன. இந்த நிலையில் சந்தான பாரதியிடம் குணா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பீர்களா? என கேட்டனர். அதற்கு பதிலளித்த சந்தான பாரதி குணா படத்தில் நடித்தவர்களை இப்போது எங்கு போய் பிடிப்பது அதெல்லாம் இரண்டாம் பாகம் எடுக்க முடியாது.
க்ளாசிக்காக ஒரு படம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டால் அதை அப்படியே விட்டு விட வேண்டும். இரண்டாம் பாகம் எடுக்குறேன் என கெடுக்க கூடாது என அவர் கூறினார். இந்தியன் 2 திரைப்படத்தை மையமாக வைத்துதான் அவர் பேசியிருந்தார்.
இருவருக்கும் வந்த விவகாரம்:
இந்த நிலையில் இதுக்குறித்து சீனு ராமசாமியிடம் கேட்ட பத்திரிக்கையாளர்கள் இப்போது விடுதலை 2 திரைப்படம் வெளிவர இருக்கிறது. சிலர் இரண்டாம் பாகம் எடுப்பதே அநாவசியம் என கூறுகிறார்கள். இதுக்குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டுள்ளனர்.
அதற்கு பதிலளித்த சீனுராமசாமி அறிவில்லாதவர்கள், சினிமாவை பற்றி தெரியாதவர்கள்தான் அப்படி சொல்லுவார்கள். ஹாலிவுட்டில் பிரபலமாக பேசப்படும் காட் ஃபாதர் திரைப்படம் 3 பாகம் வந்துள்ளது. பல படங்கள் அங்கே அப்படி வந்து வெற்றி பெற்றுள்ளன என அவர் பேசியிருந்தார்.