TV Shows
என் மனைவியோட அந்த விஷயம் கூட எனக்கு தெரியாது… வெட்கத்தை விட்டு கூறிய சீரியல் நடிகர் ஸ்ரீ குமார்.!
நடிகர் ஸ்ரீகுமார் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு முதலே இவர் சீரியல்களில் நடித்து வருகிறார்.
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு வந்த சூலம் சீரியலில் சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்தார். அதற்கு பிறகு தொடர்ந்து அவர் சன் டிவியில் ஒளிபரப்பான நிறைய சீரியல்களில் வாய்ப்புகள் கிடைத்தது.
கிட்டத்தட்ட சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி என்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் சீரியல்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீகுமார். சமீபத்தில் கூட சன் டிவியில் அவர் நடித்த வானத்தப்போல என்கிற சீரியல் அதிக வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
ஸ்ரீகுமாரின் சொந்த வாழ்க்கை:
ஸ்ரீகுமாரை பொறுத்தவரை அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கான அம்சத்தை கொண்டு இருக்கிறார் என்றாலும் கூட அவருக்கு தொடர்ந்து நிறைய படங்களில் எல்லாம் வாய்ப்புகள் கிடைத்தது கிடையாது.
இருந்தாலும் கூட தமிழில் ஒரு சில திரைப்படங்களில் இவர் வாய்ப்பை பெற்று நடித்திருக்கிறார். பம்பரக் கண்ணாலே, சரோஜா, தெறி ஆர்.கே நகர் விக்ரம் தற்சமயம் வெளிவந்த அமரன் திரைப்படத்தில் கூட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகுமார்.
இந்த நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து ஸ்ரீகுமார் ஒரு பேட்டியில் கூடி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது என்னுடைய மனைவியின் சம்பளம் என்னவென்று எனக்குத் தெரியாது என்று நான் ஒரு முறை கூறினேன்.
அதற்கு நிறைய பேர் அது கூட எப்படி தெரியாமல் இருக்கும் என்று கேட்டிருந்தனர். ஆனால் உண்மையிலேயே எனக்கு தெரியாது. நான் எப்போதும் என்னுடைய மனைவியின் சுதந்திரத்தில் கை வைக்க மாட்டேன். பொதுவாக ஆண்கள் பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுத்து விட்டோம் என்று தான் கூறுவார்கள்.
ஆனால் கொடுப்பதற்கு நாம் யார் அவர்கள் பிறக்கும் போதே சுதந்திரமாக தானே பிறக்கிறார்கள் என்று இது குறித்து பதில் கூறியிருந்தார் ஸ்ரீகுமார்.
