பிரதீப் தவிர மத்த ஆம்பளைங்க எல்லாம் புடிங்கிட்டு இருக்காங்களா!.. கமலால் கடுப்பான ஷகிலா!.
Pradeep in Biggboss: பிக் பாஸ் நிகழ்ச்சியானது போன வாரம் முதல் மிகவும் பரபரப்புடன் சென்று கொண்டுள்ளது. முக்கியமாக அதில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டது குறித்து பலவித வாக்குவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே யுகேந்திரனின் மனைவி மாலினி யுரேந்திரன் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது புன்னகை மன்னன் திரைப்படத்தில் 16 வயது நிரம்பிய நடிகை ரேகாவை அனுமதியின்றி முத்தமிட்டவர் கமலஹாசன்.
அவர் பெண்கள் பாதுகாப்பு பற்றி எப்படி பேசலாம் என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் தற்சமயம் நடிகை சகிலாவும் இது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறும் பொழுது கமல் இவ்வளவு குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் கமலின் மிகப்பெரிய ரசிகையாக இருந்திருக்கிறேன். பெண்களுக்கு பிரதீப் மட்டுமே உதவ வேண்டும் என்று கமல்ஹாசன் கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. அப்படி என்றால் மற்ற ஆண்கள் எல்லாம் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறார்கள். என்று நேரடியாக கேட்டு இருக்கிறார் இதனை அடுத்து மீண்டும் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பேசப்படுகிறது.