News
மேனஜர்களே என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள்!.. உண்மையை கூறிய ஜிவி பிரகாஷ் பட நடிகை..
தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என்று நான்கு மொழியில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஷாலினி பாண்டே. இவர் தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்றாலும் கூட மற்ற மொழிகளில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
முக்கியமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகையாக ஷாலினி பாண்டே இருந்து வருகிறார். சமீபத்தில் கூட மகாராஜ் என்கிற திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.
அந்த காட்சி படத்திற்கு தேவையான காட்சியாக இருந்ததால் அந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் தொடர்ந்து திரைப்படங்களில் வாய்ப்புகளை தேடி வருகிறார். 2017ல் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலமாக முதன் முதலாக திரை உலகிற்கு அறிமுகமானார் ஷாலினி பாண்டே.

முதல் பட வாய்ப்பு:
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் அப்பொழுது தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது. அதனை தொடர்ந்து ஷாலினி பாண்டேவிற்கும் வரவேற்புகள் கிடைக்க துவங்கியது. தொடர்ந்து ஹிந்தியில் வாய்ப்பை பெற்று அதில் ஒரு திரைப்படத்தில் நடித்தார்.
பிறகு தமிழில் 100% காதல் என்னும் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடித்தார். அதேபோல கொரில்லா என்கிற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். வரிசையாக அந்த காலகட்டங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.

இதற்கு இடையிடையே ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட்டில் இவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன. எனவே திரும்ப தமிழில் அதிக படங்களில் நடிப்பாரா என்பது சந்தேகமான ஒரு விஷயமாக தான் இருந்து வருகிறது.
உடல் கேலிக்கு உள்ளான நடிகை:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் ஷாலினி பாண்டே அதில் அவர் கூறும் பொழுது அர்ஜுன் ரெட்டி படம் தான் என்னுடைய முதல் படம். அதில் நடிக்கும் பொழுது நிறைய பேர் என்னுடைய உடலை கேலி செய்தனர்.
ஏனெனில் அப்பொழுது நான் கொஞ்சம் அதிக எடையுடன் இருந்தேன். மேலும் என்னுடைய மேனேஜர் என்னுடைய அப்பாவித்தனத்தை தவறாக பயன்படுத்தி சில படங்களில் என்னை நடிக்கச் சொல்லி ஏமாற்றினார். அந்த நேரத்தில் என்னுடைய குடும்பம் தான் எனக்கு ஆதரவாக இருந்தது என்று கூறியிருக்கிறார் ஷாலினி பாண்டே.
