Connect with us

ரஜினியை வைத்து படம் பண்ண மாட்டேன்… சங்கர் கோபப்பட இதுதான் காரணம்!..

Rajini and shankar

Cinema History

ரஜினியை வைத்து படம் பண்ண மாட்டேன்… சங்கர் கோபப்பட இதுதான் காரணம்!..

Social Media Bar

Rajinikanth and Director Shankar : ரஜினி காந்த் தமிழ் மட்டுமல்ல இந்திய திரையுலகில் போற்றக்கூடிய திறமைவாய்ந்தவர். மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இந்த இடத்தை அடைந்துள்ளார்.

உழைப்புக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே அவர் ரஜினி காந்த் மட்டுமே என்று போற்றக்கூடிய அளவிற்கு திறமை, உழைப்பு.

அதேபோல் AVM தமிழ் திரையுலகை ஆண்ட தயாரிப்பு நிறுவனம். பட வாய்ப்புகளைத்தேடி AVM ஸ்டுடியோவிற்கு சென்றால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இளம் நடிகர்களிடையே உருவாக்கிய நிறுவனம்.

AVM மற்றும் ரஜினிகாந்த் இணைந்து 9 படங்களில் பணியாற்றியிருந்தார்கள் அவ்வளவும் நல்ல ஹிட் படங்கள். கடைசியாக சிவாஜி படம் சங்கர் தயாரிப்பில் வெளியானது.

அந்த படமும் ஹிட். அந்த படம் உருவாவதற்கு முன் ரஜினிகாந்த் AVM சரவணனை சந்தித்து பேசியிருக்கிறார். தனக்கு ஒரு பெரிய படம் பண்ணனும் என்று கூற அதற்கு சங்கர் தான் சரியான இயக்குனர் என்று சரவணன் தெரிவித்துள்ளார்.

அப்போது சங்கர் தனக்கு படம் பண்ண வரமாட்டார் என்றும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அதாவது ரஜினிக்கான ஒரு கதையை தயார் செய்துவிட்டு ஆறு மாதமாக சந்திக்க முயற்சி செய்துள்ளார் சங்கர் ஆனால் ரஜினி சங்கரை சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான சங்கர் இனி ரஜினியே என் வீட்டு வாசலில் வந்து நின்று படம் பண்ண வேண்டும் என்றாலும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று வைரமுத்துவிடம் கூறியிருக்கிறார்.

பிறகு ஏவிஎம் சரவணனோ நீங்கள் கேட்க வேண்டாம் நாங்கள் கேட்கிறோம் என்று கூறி பேசி முடித்துவிட்டார்கள். அதன் பிறகு உருவானது தான் சிவாஜி.

Articles

parle g
madampatty rangaraj
To Top