2 நாள் நடிச்சதுக்கு விஜயகாந்த் கொடுத்த சம்பளம்!.. கண்ணீர் விட்டு அழுத நடிகை!..

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிகமாக திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் அதிக நன்மைகளை செய்யக்கூடியவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் விஜயகாந்த்.

திரைத்துறைக்கு வந்த பிறகு பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். அவரால் நன்மைகள் பெற்றவர்கள் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக இருக்கின்றனர் என்றே கூறலாம். சமூக வலைத்தளங்கள் பிரபலமாகும் வரை விஜயகாந்த் செய்த நன்மைகள் எல்லாம் பெரிதாக யாருக்கும் தெரியமாலே இருந்தது.

vijayakanth1
vijayakanth1
Social Media Bar

இந்த நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ்க்கு விஜயகாந்த் செய்த உதவி குறித்து அவர் தனது பேட்டியில் கண்ணீர் மழ்க பேட்டி கொடுத்துள்ளார். விஜயகாந்த் திரைப்படமான நரசிம்மா திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாந்தி வில்லியம்ஸ்.

அப்போது மிகவும் கஷ்டத்தில் இருந்தார் சாந்தி வில்லியம்ஸ். அவருக்கு கடன் மட்டுமே 75,000 ரூபாய் இருந்துள்ளது. நரசிம்மா திரைப்படத்தில் ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் சம்பளம் என்று பேசி அவர் இரண்டு நாட்களுக்கு படத்தில் நடித்தார்.

இரண்டு நாட்களுக்கு 20,000 ரூபாய்க்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளனர். என்ன இவ்வளவு தொகை கொடுக்கிறீர்கள் என கேட்டப்போது விஜயகாந்த் தான் உங்களுக்கு கொடுக்க சொன்னார் என அவர்கள் கூறியுள்ளனர். பிறகு அதை வைத்து என் கடனை அடைத்தேன் என்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.