விஜயகாந்த் கதையில் நடிக்கிறாரா  ஷாருக்கான் –  திடீர் தகவல்

தமிழக சினிமாவில் வெகு காலமாக பிரபலமான இயக்குனராக இருந்தவர் அட்லீ.  இவர் தளபதி விஜய்யை வைத்து பிகில், மெர்சல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

Social Media Bar

தற்சமயம் அட்லீ பாலிவுட்டில் திரைப்படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

பொதுவாக அட்லீ ஒரு படம் எடுத்தாலே அதன் காட்சிகள் எந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை மக்கள் ஆராய்வதுண்டு. அப்படியாக இந்த ஷாருக்கான் படமும் எந்த படத்தின் கதையாக இருக்கும் என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது.

சினி வட்டாரத்தில் இந்த திரைப்படம் விஜயகாந்த் நடித்த பேரரசு திரைப்படத்தின் கதைதான் ஜவான் என்று கூறி வருகின்றனர். அதில் உள்ளது போலவே இதிலும் இரண்டு ஷாருக்கான்கள் அண்ணன், தம்பிகளாக இருப்பார்களோ? என்கிற கேள்வி இருந்து வருகிறது. 

ஆனாலும் அட்லீ ஹாலிவுட் திரைப்படங்களையே தழுவி படம் எடுப்பவர் என்பதால் விஜயகாந்த் திரைப்படத்தின் கதையை எடுத்திருக்க வாய்ப்பில்லை என பேசப்படுகிறது.